என்ன தவம் செய்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துசத்யபிரகாஷ் & சைந்தவிகோபி சுந்தர்தள்ளி போகாதே

Enna Thavam Seithan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…

ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

—BGM—

ஆண் : உன் பார்வை சரம் நீங்காத வரம்…
உன் பாதத் தடம் என் பூமி படம்…

ஆண் : குழந்தை ஒளித்து வைக்கும் பொம்மையாய்…
காதல் துரத்தி கொண்டு பார்த்திடும்…
தினமும் முகம் மறையும் புள்ளியில்…
காற்றில் நரை விழும்…
என் தாபம் என்னை தோய்த்திடும்…

ஆண் : ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ்ஓ யெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…

—BGM—

பெண் : உன் பேரை மனம் ரீங்காரம் இடும்…
உன்னாலே வரும் சிங்கார சினம்…

பெண் : உயிரில் தங்கி விடும் ஏக்கங்கள்…
நிழலின் கருமை என பூத்திடும்…
அழகில் வின்மினி தொடும் ஆற்றலை…
பேதை புறா பெரும்…
என் காதல் என்னை ஏந்திடும்…

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…

ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…


Notes : Enna Thavam Seithan Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. என்ன தவம் செய்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading