ஒரு சுடர் இரு சுடர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Oru Sudar Iru Sudar Song Lyrics in Tamil


BGM

குழு : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

குழு : கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்…
அண்ணக் கிளியே ஏற்று…
காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்…
அம்மன் அடியே போற்று…

குழு : நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…
நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…

பெண் : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

BGM

பெண் : நான் ஓர் வரம் உன்னிடம் வாங்க வேண்டும்…

குழு : மங்கலக் குங்குமம் மஞ்சள் பூசியே…
பண்டிகை நாள் என ஒன்றாய்க் கூடியே…

ஆண் : நூறாண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்…

குழு : ஜோதியை வீதியில் எங்கும் ஏந்தியே…
ஆதியை அன்னையை நெஞ்சில் போத்தியே…

பெண் : நாம் கேட்கும் யாவும் நம் கையில் சேரும்…
நாம் பார்க்கும் யாவும் பூஞ்சோலை ஆகும்…

ஆண் : வானம் பாடிகள் கானம் பாடிடும்…
பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுவதும்…

பெண் : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…

ஆண் : திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

பெண் : கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்…
அண்ணக் கிளியே ஏற்று…

ஆண் : காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்…
அம்மன் அடியே போற்று…

BGM

ஆண் : ஓர் ஆயிரம் ஆசைகள் ஊஞ்சல் ஆடும்…

குழு : நெஞ்சிலே நெஞ்சிலே நேசம் பூத்ததே…
கொஞ்சலாய் கொஞ்சவே நேரம் வாய்த்ததே…

பெண் : ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்…

குழு : தோகையின் தோகையின் தேகம் வாடுது…
தென்றலும் தென்றலும் ராகம் பாடுது…

ஆண் : பொன் மாலை தோறும் பூந்தீபம் ஏற்றும்…
சிங்காரம் கூடும் நல் யோகம் வேண்டும்…

பெண் : தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்…
என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்…

ஆண் : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…

பெண் : திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

ஆண் : கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்…
அண்ணக் கிளியே ஏற்று…

பெண் : காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்…
அம்மன் அடியே போற்று…

குழு : நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…
நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…

குழு : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…


Notes : Oru Sudar Iru Sudar Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. ஒரு சுடர் இரு சுடர் பாடல் வரிகள்.


Scroll to Top