இவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Ival Yaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…

—BGM—

ஆண் : காதல் வாழ்வு கானல் என்று நேற்றுப் பேசினேன்…
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்…

பெண் : காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்…
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்…

ஆண் : கண்ணே பசும் பொன்னே…
வந்தேன் உந்தன் பின்னே…

பெண் : கண்ணா மணிவண்ணா…
உன் பேர் தினம் சொன்னேன்…
உனைக் கண்டேன் கனிந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…

—BGM—

பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன் வாசல் வந்ததே…
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே…

ஆண் : நேரம் காலம் கூடும் போது நேசம் வென்றதே…
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே…

பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்…

ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்…
அதில் என்னை இழந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…


Notes : Ival Yaro Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. இவள் யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading