அம்மன் கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Amman Koyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

—BGM—

ஆண் : பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்…
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்…
பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம்…
பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும்…

ஆண் : அவன் மனமோ அது எங்கே சென்றாலும்…
இவள் மனமோ அவன் பின்னாலே போகும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

—BGM—

ஆண் : காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும்…
கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும்…
பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும்…
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்…

ஆண் : தன் மகனோ அவன் யாரான போதும்…
அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…


Notes : Amman Koyil Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading