ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & இளையராஜாஇளையராஜாஎல்லாமே என் ராசாதான்

Oru Santhana Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…

பெண் : குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…
ராத்திரி வேளையிலே…
கண் முழிச்சி நான் இருப்பேன்…
கண்ணே உன் பக்கத்திலே…

பெண் : சோலை பூவே ஆராரோ…
பசும் சொக்க பொன்னே ஆரிரோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…

BGM

பெண் : நான் வளர்க்கும் மூத்த பிள்ளை…
பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே…
நான் குளிக்கும் மஞ்சளுக்கு…
நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே…

பெண் : என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட…
தெய்வம் கூட ஈடில்லையே…
எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ…
சொந்தம் பந்தம் வேறில்லையே…

பெண் : என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது…
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது…

பெண் : மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே…
குழலைப் போலே தினம் மழலை பேசும்…
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே…

பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…

ஆண் : குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…
ராத்திரி வேளையிலே…
கண் முழிச்சி நான் இருப்பேன்…
கண்ணே உன் பக்கத்திலே…

ஆண் : சோலை பூவே ஆரிரோ…
பசும் சொக்க பொன்னே ஆரிரோ…

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…

BGM

ஆண் : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள…
அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே…
போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட…
நேரம் இல்லே நேரம் இல்லே…

ஆண் : நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று…
உன்னை விட்டால் யாரும் இல்லை…
நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த…
கண்ணில் இன்னும் ஈரம் இல்லை…

ஆண் : காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ…
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ…

ஆண் : மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே…
குழலை போலே தினம் மழலை பேசும்…
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே…

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…

ஆண் : குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே…
ராத்திரி வேளையிலே…
கண் முழிச்சி நான் இருப்பேன்…
கண்ணே உன் பக்கத்திலே…

ஆண் : சோலை பூவே ஆரிரோ…
பசும் சொக்க பொன்னே ஆரிரோ…

ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே…
முழுச் சந்திரன் காயயிலே…
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே…
மலை தென்றலும் வீசயிலே…


Notes : Oru Santhana Song Lyrics in Tamil. This Song from Ellame En Rasathan (1995). Song Lyrics penned by Vaali. ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading