ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதெய்வவாக்கு

Oru Paatale Solli Song Lyrics in Tamil


ஆண் : நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரே…
நான் தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே…
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும்…
சொல்லவில்லையே…

ஆண் : அடி கண்ணே தூங்காதே…
சிறு பெண்ணே கலங்காதே…

—BGM—

ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்…
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்…
அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன்…
ஒரு அன்பாலே மெட்டு படிச்சேன்…

ஆண் : உன் சோகம் பறக்க…
என் பாட்டு விருந்து…
அத கேட்டு மறந்தா…
என் பாட்டு மருந்து…

ஆண் : நீ கூட இருந்தா…
அது போதும் எனக்கு…
வாடி இருந்தா துன்பம் எனக்கு…

ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்…
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்…

—BGM—

ஆண் : நான் ஆதாரம் இல்லா அந்தரத்து வானம்…
என் நாவோடு சேரும் நாட்டுப்புற கானம்…

ஆண் : என் சொந்தக் கதைய சொல்லிப் படிக்க…
சந்தமில்லையே…
அத சொன்னா ஆறாது…
என் சொந்தம் மாறாது…

ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு…
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல…
தெனம் பாலூட்டி என்ன வளத்த…
பரிவான சொந்தமும் இல்ல…

ஆண் : இந்த ஊரு முழுக்க…
என் பந்த ஜனங்க…
உண்மை இருக்கும்…
வெள்ளை மனங்க…

ஆண் : ஒரு காவல் இருக்கு…
என் கை வணங்க…
நான் கானம் படிச்சேன்…
கண்ண தொறக்க…

ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு…
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல…

—BGM—

ஆண் : ஒரு ஈ எறும்பு கடிச்சாலும்…
தாய் மனசு நோகும்…
நீ பாய் விரிச்சு படுத்தாலே…
இப்ப என்ன ஆகும்…

ஆண் : ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி வளத்து…
காத்துக் கிடந்தா…
அந்த தாயோட மொகம் பாரு…
கண்ணு ஒரு நாளும் ஒறங்காது…

ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல…
அத கேட்காத ஆட்களும் இல்ல…
நான் நாவாரப் பாடி அழைச்சா…
வந்து பாக்காத பார்வையும் இல்ல…

ஆண் : என் தாயி கொடுத்த…
ஒரு சக்தி இருக்கு…
உன்ன தட்டி எழுப்ப…
புத்தி இருக்கு…

ஆண் : உன்ன தாவி அணைக்க…
ஒரு நேரம் இருக்கு…
அந்த நேரம் வரைக்கும்…
பாரம் எனக்கு…

ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல…
அத கேட்காத ஆட்களும் இல்ல…

—BGM—


Notes : Oru Paatale Solli Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading