பூஜைக்கேத்த பூவிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கங்கை அமரன் & கே. எஸ். சித்ராஇளையராஜாநீதானா அந்தக்குயில்

Poojaikkaetha Poovidhu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…

ஆண் : மேல போட்ட தாவணி…
சேலையாகிப் போனது…

பெண் : சேலையிழுத்து விடுவதே…
வேலையாகிப் போனது…

ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது… ஹோய்…

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…

BGM

ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்…
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்…

பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம்…
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்…

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல…
ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா…
கூலி கேக்குற…

பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான…
மல்லு வேட்டி இழுக்குது…
மாமன் பேசும் பேச்சக் கேட்டு…
வேப்பங்குச்சி இனிக்கிது…

ஆண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…

BGM

பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி…
வெறும் வாய மெல்ல…
தோதாக யாருமில்ல தூது சொல்ல…

ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி…
போதாது புள்ள…
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல…

பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ…
சோப்பு போடுற…
கொட்டிப் போன குடுமிக்கு…
சீப்பு தேடுற…

ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட…
ஏட்ட ஏன்டி மாத்துற…
கால நேரம் கூடிப் போச்சு…
மாலை வந்து மாத்துறேன்…

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
அட பூத்தது யாரத பாத்தது…

ஆண் : மேல போட்ட தாவணி…
சேலையாகிப் போனது…

பெண் : சேலையிழுத்து விடுவதே…
வேலையாகிப் போனது…

ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது… ஹோய்…

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
ஆண் : நேத்துத்தான பூத்தது…
பெண் : பூத்தது யாரத பாத்தது…


Notes : Poojaikkaetha Poovidhu Song Lyrics in Tamil. This Song from Neethaana Andha Kuyil (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூஜைக்கேத்த பூவிது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading