ஒரு பாதி கதவு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil


ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…

—BGM—

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

—BGM—

ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…

ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…

பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…

—BGM—

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

—BGM—

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…

பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…

பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…

—BGM—

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…


Notes : Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பாதி கதவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading