ஒரு சான்ஸ் குடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & கானா குணாகார்த்திக்ஒன்றாக ஒரிஜினல்ஸ்

Oru Chance Kudu Song Lyrics in Tamil


பெண் : அழகா இன்னும் இன்னும்…
கொஞ்சம் எனக்காய் காத்திருடா…
அழகா இன்னும் இன்னும்…
கொஞ்சம் எனக்காய் காத்திருடா…

—BGM—

ஆண் : ஏன்மா நீ புரிஞ்சுக்க மாட்டுற பிரண்ட்ட…
ஏன்மா நீ புரிஞ்சுக்க மாட்டுற பிரண்ட்ட…

ஆண் : அவனுக்கு நீதான் அம்முகுட்டி நீதான்…
செல்ல குட்டி நீதான் உசுருடி…
அவனுக்கு நீதான் உட் பி நீதான்…
டார்லிங்கு நீதான் தேவதைடி…
ஒரு சான்ஸ் குடு பொண்ணே…

—BGM—

ஆண் : உடனடி தேவை…
என் இதயத்துக்கொரு துணை தேவை…
என் நிலழளுக்கும் ஒரு துணை தேவை…
அவ்விரண்டையும் அடைந்திட நீ தேவை…

ஆண் : உடனடி தேவை…
என் கனவுக்கு ஒரு உரு தேவை…
என் கவிதைக்கு சிறு கரு தேவை தேவை…
நீ தேவை ஆயிழையே…

ஆண் : பிரண்ட்டு பக்கா டீசென்ட்டு…
எப்பயாச்சும் கெட்ட வார்த்தை பேசுவாம் போல…
பிரண்ட்டு கொஞ்சம் பெர்பெக்ட்டு…
ஓட்ட ஜட்டிய கூட இஸ்திரி பண்ணி மாட்டிக்குவான் போல…

ஆண் : ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் தித்திப்பான பன்னு…
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி ஜாலியா நீ துன்னு…

குழு : ஓஹோ… ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் அழகான பன்னு…
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி ஜாலியா நீ துன்னு…

ஆண் : மலர்களை நீட்டி…
என் இதயத்தை உதிர்த்திட மாட்டேன்…
நான் பரிசுகள் அளித்திட மாட்டேன்…
என் உடல் உயிர் உணர்வுகள் போதாத…

ஆண் : நினைவினை காட்டி…
அக்கறைகளை அகற்றிட கேட்டால்…
அப்பிறைகளை உனக்கென்ன கேட்டால்…
கொய்வேன் பளிங்கென செய்வெண் பெண்ணே…

ஆண் : பிரண்ட்டு ரொம்ப தாராளம்…
ஹாப் பாயில்லகூட ஆபெருல வாங்குவான் போல…
பிரண்ட்டு ரொம்ப டிசிபிளின்னு…
கட்டிங் உட்ட மட்டும் வெயிட்டா சைட் அடிப்பான் போல…

குழு : ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் நாயர் கடை பன்னு…
அவன் ஒதட்டுல வெண்ணைய தடவி…
கடிச்சி கடிச்சி துன்னு…

—BGM—

ஆண் : தேன் தமிழில் சொற்கள் கொண்டு…
நான் எனது காதல் சொன்னேன்…
நீ மறுத்த பின்னே…
நான் என் செய்ய பெண்ணே…
ஐ ஆம் இன் லவ் வித் யு…
பேபி ஐ ஆம் இன் லவ் வித் யு…

ஆண் : பிரண்ட்டு பச்சை தமிழன்தான்…
ஆபத்துனா மட்டும் இங்கிலீஷ் பேசுவான் போல…
பிரண்ட்டு ரொம்ப சைலன்ட்டு…
அல்லு விட்ட மட்டும் பாட்டில வீசுவான் போல…

ஆண் : ஒரு சான்ஸ் குடு…
குழு : ஒரு சான்ஸ் குடு…
ஆண் : ஒரு சான்ஸ் குடு…
ஆண் : ஒரு சான்ஸ் குடு…

ஆண் : ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் தித்திப்பான பன்னு…
அவன் நெஞ்சில காதல வச்சி…
காத்திருக்கான் கண்ணே…

குழு : ஒஹோஒ… ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் அழகான பன்னு…
அவன் நெஞ்சில காதல வச்சி…
ஆண் : காத்திருக்கான் கண்ணே…


Notes : Oru Chance Kudu Song Lyrics in Tamil. This Song from Ondraga Originals (2020). Song Lyrics penned by Madhan Karky. ஒரு சான்ஸ் குடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading