| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | திப்பு & ஜெஸ்ஸி கிப்ட் | ஜி. வி. பிரகாஷ் குமார் | வெயில் |
Ooran Thottathula Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
ஆண் : ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு…
தாயம் போட்டு தொடங்குதுடா…
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும்டா…
ஆண் : யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு…
எதுவா இருந்தாலும் மிதிச்சா நீ சீறு…
வெற்றியோடு வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு…
ஆண் : ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா…
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
—BGM—
ஆண் : வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா…
வழி நூறு தெரியும்டா…
வாழை மட்டை நாறு கூட…
ஓடி மட்டை ஆகும்டா…
ஆண் : மழை பெய்யும் காலத்தில்…
பனை விசிறி விக்காம…
பூ போட்ட குடைய விப்போம்…
ஆண் : மலை நாட்டு ஊருக்குள்…
தேன் விக்க போகாம…
தேநீறு கடைய வைப்போம்…
ஆண் : ஹே ஆத்தோட போட்டாலும் அழக்காம நீ போடு…
எல்லாமே மீனாக திரும்பி வரும்…
அடி மேல் அடி வச்சா அம்மி கல் நகராது…
வெடி ஒன்னு போட்டாக்கா நகர்ந்து விடும்…
ஆண் : ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா…
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
—BGM—
{ ஆண் : ஆக்கார் அடிக்கோணும்…
அப்போ தான் பம்பரம்…
இன்னொரு ஆள் வேணும்…
அப்போ தான் பந்தயம்… } * (2)
ஆண் : குறி பாத்து அடிச்சாக்கா குண்டூசி போலதான்…
வெறி வேணும் மனசுக்குள்ள…
பணம் காச கொடுத்தாக்கா உறவெல்லாம் சிரிக்காதா…
ஆனாலும் அண்ணன் இல்லை…
ஆண் : அன்பாலே நீர் விட்டு ஆகாயம் வரை தொட்டு…
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க
பூவானம் ராகெட்டு தாவாதோ தரைக்கிட்ட…
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க…
ஆண் : ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா…
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
ஆண் : ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு…
தாயம் போட்டு தொடங்குதுடா…
விட்டு பாரு ஆடு எது புலி எது…
வெட்டும் போது தெரிஞ்சிடும்டா…
ஆண் : யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு…
எதுவா இருந்தாலும் மிதிச்சா நீ சீறு…
வெற்றியோடு வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு…
ஆண் : ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா…
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
Notes : Ooran Thottathula Song Lyrics in Tamil. This Song from Veyil (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஊரான் தோட்டத்துல பாடல் வரிகள்.


