இறைவனை தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜாஇளையராஜா60 வயது மாநிறம்

Iraivanai Thedi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இறைவனை தேடும் உலகத்தில்…
இவரோ மனிதனை தேடுகிறார்…

—BGM—

ஆண் : இறைவனை தேடும் உலகத்தில்…
இவரோ மனிதனை தேடுகிறார்…
மனது இருப்பவன்தானே…
மனிதன் அவனே தேடுகிறான்…

ஆண் : இந்த உலகத்தில் அவன் கிடைப்பனோ…
எந்த உலகத்திலே இருப்பானோ…
இந்த உலகத்தில் அவன் கிடைப்பனோ…
எந்த உலகத்திலே இருப்பானோ…

ஆண் : அவனை தேடுதல் போலே…
இவனே தன்னையே தேடுகிறான்…
தன்னையே தேடி தேடி இவர்கள்…
அவனை மறந்துவிட்டார்…

ஆண் : இறைவனை தேடும் உலகத்தில்…
இவரோ மனிதனை தேடுகிறார்…
மனது இருப்பவன்தானே…
மனிதன் அவனே தேடுகிறான்…

—BGM—

ஆண் : பொன்னும் மணியும் பூட்டி வைத்தவன்…
இன்னும் கோடி தேட…
கோடி கோடி குவித்து வைத்தவன்…
கோட்டை கொடியை தேட…

ஆண் : ஆசை தீர ஆடி பார்த்தவன்…
அடுத்த உயரம் தேட…
உச்சம் தன்னை தொட்டு நிற்பவன்…
உச்ச புகழை தேட…

ஆண் : தேடலே இந்த வாழ்க்கையின்…
தேவையாய் ஆனதே…
ஆயுளின் மொத்த காலமும்…
தேடியே போனதே…

ஆண் : அந்த இறைவன் இறைவன் பூமிக்கு வந்தான்…
இதயம் ஒன்றை தேடி…
அது கிடைக்கவில்லை போடி…

—BGM—

ஆண் : வாட்டம் இன்றி காற்றை போலவே…
வாழும் மனிதம் எங்கே…
ஆட்டம் போட்டு கூட்டம் கூட்டியே…
ஆழும் மனிதன் இங்கே…

ஆண் : கொஞ்சம் மனிதம் நெஞ்சில் வைத்து…
தான் மிஞ்சும் மனிதன் எங்கே…
நெஞ்சம் எங்கும் வஞ்சம் சேர்த்து தான்…
எஞ்சும் மனிதன் இங்கே…

ஆண் : யாருமே இல்லை என்றுதான்…
யாருமே இல்லையே…
கருவிலே தோன்றும் உயிரெல்லாம்…
கடவுளின் பிள்ளையே…

ஆண் : அட மனிதா மனிதா…
அலைச்சலை ஒளித்து…
அமைதி ஒன்றை தேடு…
அது கடவுள் வரைந்த கொடு…

ஆண் : இறைவனை தேடும் உலகத்தில்…
இவரோ மனிதனை தேடுகிறார்…
மனது இருப்பவன் தானே…
மனிதன் அவனே தேடுகிறான்…

ஆண் : இந்த உலகத்தில் அவன் கிடைப்பனோ…
எந்த உலகத்திலே இருப்பானோ…
இந்த உலகத்தில் அவன் கிடைப்பனோ…
எந்த உலகத்திலே இருப்பானோ…

ஆண் : அவனை தேடுதல் போலே…
இவனே தன்னையே தேடுகிறான்…
தன்னையே தேடி தேடி இவர்கள்…
அவனை மறந்துவிட்டார்…

ஆண் : இறைவனை தேடும் உலகத்தில்…
இவரோ மனிதனை தேடுகிறார்…
மனிதனை தேடுகிறார்…
மனிதனை தேடுகிறார்…


Notes : Iraivanai Thedi Song Lyrics in Tamil. This Song from 60 Vayadu Maaniram (2018). Song Lyrics penned by Pa. Vijay. இறைவனை தேடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading