தேடி தேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபென்னி டயல் & விபாவரி ஆப்தே ஜோஷிஇளையராஜா60 வயது மாநிறம்

Thedi Thedi Song Lyrics in Tamil


BGM

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்…
தேடும் உயிரை பாராதோ…

ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்…
தேடும் இடத்தை சேராதோ…

பெண் : விண்ணை தேடி போகும் மேகம்…
மண்ணை தேடி சிந்தும் வண்ணம் புதிரல்லவா…

ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்…
தேடி தேடி…

BGM

பெண் : தேடாமல் இங்கே ஏதும் வாழ்க்கை ஒன்றும் இல்லை…
தேடாமல் தேடதானே வந்தோம் நாம்…

ஆண் : பூமிக்குள் நீரைத் தேடி ஓடும் வேரை போலே…
ஏதேதோ பாதை மாறி சென்றோம் நாம்…

பெண் : யாரை தேடி இங்கு யாரோ யாரோ…
வீசும் காற்று அதை கூறாதோ…

ஆண் : பூவின் கூட்டம் சொல்லும் ஆரிராரோ…
தேடும் இன்பம் இன்னும் கூடாதோ…

பெண் : வானில் உள்ள வண்ணம் ஏழும் போதாதே…
தேடல்கள் தீராதே…

ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்…
தேடும் உயிரை பாராதோ…

பெண் : தேடி தேடி ஓடும் கால்கள்…
தேடும் இடத்தை சேராதோ…

BGM

ஆண் : பூக்கள் மேல் ஓடி ஓடி தேடி வந்த காற்று…
வாசத்தின் வார்த்தை ஒன்றை சொல்லாதோ…

பெண் : எங்கேயோ மூங்கில் காட்டில் கேட்க்கும் அந்த பாட்டு…
என் நெஞ்சின் தேடல் என்ன சொல்லாதோ…

ஆண் : கூண்டுக்குள்ளே வாழும் நத்தை நெஞ்சம்…
தேடல் கொண்டால் விண்ணை தாண்டாதோ…

பெண் : சூரக் காற்றில் சுற்றி விழும் பூக்கள்…
நேசம் கொண்டு கைகள் தாங்காதோ…

ஆண் : தேடல் கொண்ட நெஞ்சம் என்றும் ஓயாதே…
தேடல்கள் தீராதே…

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்…
தேடும் உயிரை பாராதோ…

ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்…
தேடும் இடத்தை சேராதோ…

பெண் : விண்ணை தேடி போகும் மேகம்…
மண்ணை தேடி சிந்தும் வண்ணம் புதிரல்லவா…

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்…
தேடி தேடி…


Notes : Thedi Thedi Song Lyrics in Tamil. This Song from 60 Vayadu Maaniram (2018). Song Lyrics penned by . தேடி தேடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading