பனி இல்லாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆனந்த ஜோதி

Paniyillatha Margazhiya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…
பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…

ஆண் : இனிப்பில்லாத முக்கனியா…
இசை இல்லாத முத்தமிழா…
இனிப்பில்லாத முக்கனியா…
இசை இல்லாத முத்தமிழா…

ஆண் : பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…

—BGM—

பெண் : அழகில்லாத ஓவியமா…
ஆசை இல்லாத பெண் மனமா…
அழகில்லாத ஓவியமா…
ஆசை இல்லாத பெண் மனமா…

பெண் : மழை இல்லாத மாநிலமா…
மலர் இல்லாத பூங்கொடியா…
மலர் இல்லாத பூங்கொடியா…

பெண் : பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…
இனிப்பில்லாத முக்கனியா…
இசை இல்லாத முத்தமிழா…

பெண் : பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…

—BGM—

ஆண் : தலைவன் இல்லாத காவியமா…
தலைவி இல்லாத காரியமா…
தலைவன் இல்லாத காவியமா…
தலைவி இல்லாத காரியமா…

ஆண் : கலை இல்லாத நாடகமா…
காதல் இல்லாத வாலிபமா…
காதல் இல்லாத வாலிபமா…

ஆண் : பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…

—BGM—

பெண் : நிலை இல்லாமல் ஓடுவதும்…
நினைவில்லாமல் பாடுவதும்…
நிலை இல்லாமல் ஓடுவதும்…
நினைவில்லாமல் பாடுவதும்…

பெண் : பகைவர் போலே பேசுவதும்…
பருவம் செய்யும் கதை அல்லவா…
பருவம் செய்யும் கதை அல்லவா…

ஆண் & பெண் : பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…
இனிப்பில்லாத முக்கனியா…
இசை இல்லாத முத்தமிழா…

ஆண் & பெண் : பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…


Notes : Paniyillatha Margazhiya Song Lyrics in Tamil. This Song from Anandha Jodhi (1963). Song Lyrics penned by Kannadasan. பனி இல்லாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading