நீண்ட தூரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ்தினாவெடிகுண்டு முருகேசன்

Neenda Dhooram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…

ஆண் : உன்னைப் போல யாருமில்லை…
இந்த சீமையில்…
அன்பைப் போல வேதம்…
ஏதுமில்லை பூமியில்…

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…

—BGM—

ஆண் : வீசும் தென்றல் காற்று…
பேசிப் போகும் உன் பேரை…
பாறைக்குள்ளும் நீயே…
பாசம் வைக்கும் பேரை…

ஆண் : இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே…
நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே…

ஆண் : வாசல்மீதுக் கோலம் போல…
நட்பு சேருமே…
காலம் மாறிப் போகக்கூடும்…
காட்சி வாழுமே…

ஆண் : மனதில் கலங்கம் இல்லாமல்…
கருணை புரிபவன் நீயே…
எதையும் திரும்பிப் பெறாமல்…
முழுதும் தருபவன் நீயே…

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…

—BGM—

ஆண் : ஆராரோ ஆராரிராரோ…
ஆராரோ ஆராரிராரோ…

ஆண் : நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு…
போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு…
கனவே கண்களாய் மாறிப் போவதேனோ…
வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ…

ஆண் : என்னில் நீயும் வாழ்வதாலே…
ஏதுத் தொல்லைகள்…
நீயும் நானும் காதல் தாயின்…
இளைய பிள்ளைகள்…

ஆண் : நெளியும் நதியலைப் போல…
நினைவில் சுதந்திரமாகு…
உறவில் தலைமுறைக்கூட…
உயிரில் நிரந்தரமாகு…

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…

ஆண் : உன்னைப் போல யாருமில்லை…
இந்த சீமையில்…
அன்பைப் போல வேதம்…
ஏதுமில்லை பூமியில்…

ஆண் : நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…

—BGM—


Notes : Neenda Dhooram Song Lyrics in Tamil. This Song from Vedigundu Murugesan (2009). Song Lyrics penned by Yugabharathi. நீண்ட தூரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading