| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | ஷங்கர் மகாதேவன் & தர்ஷினி | தினா | வெடிகுண்டு முருகேசன் |
Seenicheevu Sivappukari Song Lyrics in Tamil
ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி…
சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி…
—BGM—
ஆண் : சீனி சேவு சிரிப்புக்காரி…
கார சேவு மொறப்புக்காரி…
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே…
அந்த பால்கோவா முத்தம் வேணுமே…
பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா…
கையு முறுக்கு வெரப்புக்காரா…
தேங்காச் சில்லு கண்ணு போதுமே…
வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே…
பெண் : சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா…
ஆண் : மச்சம் ஒதடு இனிக்கும் போது…
மச்சான் மனசில் இனிக்கும் தேனே…
உன் சிரிப்புல கைதியா மாறினேனே…
பெண் : சீனி சேவு சிரிப்புக்காரா…
கார சேவு மொறப்புக்காரா…
இஞ்சி மிட்டாய் கன்னம் போதுமே…
அந்த பால்கோவா முத்தம் வேணுமே…
—BGM—
ஆண் : முத்தமே மொத்தமா மாறி போச்சு இப்போது…
சித்தமே சுத்தமா ஆகி போச்சு இப்போது…
பெண் : உன் மீசக்குள்ள நானே…
ஒரு கன்னி வெடி பொதச்சேன்…
நீ முறுக்கும் போது…
வெடிக்குமான்னு தவியாத் தவிச்சேன்…
ஆண் : என் ஆயுசுக்கும் நானே…
ஒரு ஆசை வெத போட்டேன்…
அது வளர தானே…
பருவ வேலி நானும் போட்டேன்…
பெண் : கள்ளக் சிரிப்புக்காரா… நல்ல மொறப்புக்காரா…
பெண் : வெக்க வேலி தாண்டி நானும்…
உன்ன நானும் வெரட்ட மாட்டேன்…
நீ மருந்துபோல் இருந்துக்கோ மறுக்க மாட்டேன்…
ஆண் : ஹே சீனி சேவு சிரிப்புக்காரி…
கார சேவு மொறப்புக்காரி…
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே…
அந்த பால்கோவா முத்தம் வேணுமே…
பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா…
கையு முறுக்கு வெரப்புக்காரா…
தேங்காச் சில்லு கண்ணு போதுமே…
வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே…
—BGM—
ஆண் : எரியும் விறகா நினைவானதே…
கனவோ அதிலே குளிரும் காயுதே…
பெண் : பகலும் இரவா உருமாறுதே…
உடலும் உசுரும் உறைந்து போகுதே…
ஆண் : நீ பாத்தாலே நெஞ்சு பூ பூக்கும்…
பெண் : கை சேர்ந்தாலே அன்பு காய் காய்க்கும்…
ஆண் : கருவம் முள்ளும் உன்ன நெனச்சு…
எலவு பஞ்சாச்சு…
பெண் : அவரக் கொடி உன்ன அணைச்சு…
அருகம்புல்லாச்சு…
ஆண் : நீ ஆசையோடு பேச காத்து சூடாச்சு…
பெண் : கள்ளச் சிரிப்புக்காரா… நல்ல மொறப்புக்காரா…
ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி…
Notes : Seenicheevu Sivappukari Song Lyrics in Tamil. This Song from Vedigundu Murugesan (2009). Song Lyrics penned by Yugabharathi. சீனிசேவு சிரிப்புக்காரி பாடல் வரிகள்.
