நினைக்க தெரிந்த மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆனந்த ஜோதி

Ninaikka Therindha Song Lyrics in Tamil


BGM

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

பெண் : மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா…
மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய தெரியாதா…
அன்பே மறைய தெரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா…
இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா…
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா…
படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா…
பனியே மறைய தெரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா…
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா…
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா…
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…
தலைவா என்னை புரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…


Notes : Ninaikka Therindha Song Lyrics in Tamil. This Song from Anandha Jodhi (1963). Song Lyrics penned by Kannadasan. நினைக்க தெரிந்த மனமே பாடல் வரிகள்.


Scroll to Top