ஓ சோனா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன், அஜித்குமார் & ஃபெபி மணிதேவாவாலி

Oh Sona Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ சோன ஓ சோனா…
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா…
ஓ சோன ஓ சோனா…
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா…

ஆண் : வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா…
அவள் வயதுக்கு வந்த தங்க மலரா…
வாழை தண்டு கால்கள் கொண்ட மானா…
அவளை காதல் செய்த கதையினை சொல்லவா…

ஆண் : ஓ சோனா ஓ சோனா…
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா… ஆஆ…

BGM

ஆண் : ஒரு நாள் அவ மவுத்ஆர்கன்…
ப்ளே பண்ணிட்டு இருந்தா…
நான் உக்கார்ந்து கேட்டுட்டு இருந்தேன்…
உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா…
நான் தெரியும்னே…

பெண் : ஏ… நிறுத்து… ஏன் தெரியும்னு சொன்ன…
தெரியாதுனு சொல்ல வேண்டியதுதானே…

ஆண் : ஏன் தெரியும்றத தெரியும்தானே சொல்லனும்…
எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது…

பெண் : அய்யோ மக்கு இந்த மாதிரி விஷயத்துல…
பொய் சொல்லலாம்…
பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற…
ஆம்பளைங்க விட…
தெரியாதுனு சொல்ற ஆம்பளைங்கல தான்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா…
அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா…
அப்பிடி இப்பிடி பெரிய ரொமான்ஸே நடந்துருக்கும்…
நீ மிஸ் பண்ணிட்ட…

ஆண் : இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ் நடந்துதே…
பெண் : நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா…
ஆண் : ஆமா…
பெண் : எப்படி…

ஆண் : அவ மவுத்ஆர்கன் கொடுத்தா…
நான் கிட்ட போயி வாங்குனேன்…
வாங்கிட்டு மவுத்ஆர்கன பாத்தேன்…
அவள பாத்தேன்…
மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு…
உன் மவுத்தே ஆர்கன் மாதிரி தான் இருக்கு…
அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்னு சொல்லி…
கிஸ் பண்ணிட்டேன்…

BGM

ஆண் : ஓ சோனா ஓ சோனா…
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா… ஆஅ…

BGM

ஆண் : ஒரு மாலை நேரத்தில்…
மழை கொட்டும் மாதத்தில்…
அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்…

ஆண் : அவள் பெண்மை வளைத்து…
அதை நாலாய் மடித்து…
என் மடி என்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துக் கொண்டேன்…

ஆண் : மழை நின்றும் பெண் எழவே இல்லை…
என்ன செய்தோம் அது நினைவே இல்லை…
என்ன வியப்பு…
மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள்…
மார்போடு ஏதோ பட்டு நழுவிக்கொண்டாள்… ஆஅஆ… அஹ்ஹ…

BGM

ஆண் : ஐ லவ் யூ சோனா… சோனா…
பேபி ஐ லவ் யூ…

ஆண் : ஓ சோனா ஓ சோனா…
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா…

BGM

ஆண் : ஐ லவ் யூ… லவ் யூ…


Notes : Oh Sona Song Lyrics in Tamil. This Song from Vaali (1999). Song Lyrics penned by Vairamuthu. ஓ சோனா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top