நிலவை கொண்டு வா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாவாலி

Nilavai Konduva Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நிலவை கொண்டு வா…
கட்டிலில் கட்டி வை…
மேகம் கொண்டு வா…
மெத்தை போட்டு வை…

ஆண் : நிலவை பிடித்தேன்…
கட்டிலில் கட்டினேன்…
மேகம் பிடித்தேன்…
மெத்தை விரித்தேன்…

பெண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டி வை…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை காவல் வை…

ஆண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டினேன்…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை நம்பினேன்…

பெண் : இன்று முதல் இரவு…

ஆண் : இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…
இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…

ஆண் : கிள்ளவா…
உன்னை கிள்ளவா…
இல்லை அள்ளவா நீ வா…

—BGM—

ஆண் : வரவா வந்து தொடவா…
உன் ஆடைக்கு விடுதலை தரவா…

பெண் : அவசரம் கூடாது…
அனுமதி தரும் வரையில்…
பொதுவா நான் சொன்னா…
நீ சொன்ன படி கேட்கும் காது…

ஆண் : இது போன்ற விசயத்தில்…
உன் பேச்சி உதவாது…

பெண் : மெல்ல இடையினை தொடுவாயா…
மெல்ல உடையினை களைவாயா…
நான் துடிக்கையில் வேடிக்கையில்…
முத்தங்கள் தருவாயா…

ஆண் : போதுமா அது போதுமா…
ஆசை தீருமா… வாம்மா…

பெண் : மாமா…

—BGM—

பெண் : மாமா என் மாமா…
இந்த நிலவை ஊதி அணைப்போமா…

ஆண் : காணாத உன் கோலம்…
கண்கொண்டு காண்கின்றதே…

பெண் : இதழால் உன் இதழால்…
என் வெட்கம் துடைத்துவிடுவாயா…

ஆண் : அங்கத்தில் வெட்கங்கள்…
எங்கெங்கு சொல்வாயா…

பெண் : தேன் எங்கெங்கு உண்டு என்று…
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்…
அதுதான் தேடி உண்ணாமல்…
பேரின்பம் வாராதுதான்…

ஆண் : இன்பமா பேரின்பமா…
அது வேண்டுமா வாமா…

பெண் : மாமா…

பெண் : நிலவை கொண்டு வா…
கட்டிலில் கட்டி வை…
மேகம் கொண்டு வா…
மெத்தை போட்டு வை…

ஆண் : நிலவை பிடித்தேன்…
கட்டிலில் கட்டினேன்…
மேகம் பிடித்தேன்…
மெத்தை விரித்தேன்…

பெண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டி வை…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை காவல் வை…

ஆண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டினேன்…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை நம்பினேன்…

பெண் : இன்று முதல் இரவு…

ஆண் : இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…
இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…

ஆண் : கிள்ளவா…
உன்னை கிள்ளவா…
இல்லை அள்ளவா நீ வா…

ஆண் : கிள்ளவா…

பெண் : கிள்ளவா…

ஆண் : உன்னை கிள்ளவா…

பெண் : கிள்ளவா…

ஆண் : இல்லை அள்ளவா நீ வா…

பெண் : அள்ளவா…

ஆண் & பெண் : நீ வா…


Notes : Nilavai Konduva Song Lyrics in Tamil. This Song from Vaali (1999). Song Lyrics penned by Vairamuthu. நிலவை கொண்டு வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading