நிழலியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனுராக் குல்கர்னி & சின்மயிஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Nizhaliyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி…
உண்மையா உண்மையா…
நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா…
ஏய்… பதில் சொல்லுவாயா…

பெண் : சின்னஞ்சிறு துளை வழியே…
அழகினை பருகுகிறாய்…
திரைவிட்டு விழிவழியே…
அவளை நீ திருடுகிறாய்…

ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி…
உண்மையா உண்மையா…
நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா…

ஆண் : உன் குவிமுனையில் உலகம் காணா…
அழகின் வானா எதிரில் தானா…
சொல்லு சொல்லு நீ…

ஆண் : தரையின் மேலே இவளை போல…
கனவும் உண்டா சொல்லு…
உன்னை விட மாட்டேன்…

BGM

ஆண் : விண்ணில் மண்ணில் நீயும் நானும்…
காணா ஒற்றை மின்னல்…
அவள் அவள் புன்னகையில் கண்டோம்…

ஆண் : பூவோடும் தீயோடும் கொள்ளா வர்ண போதை…
அவள் அவள் நிறத்தினில் கொண்டோம்…
மின்கம்பத்தில் பூகம்பத்தில் இல்லா அதிர்வெல்லாம்…
அவள் நம்மை நெருங்கிடக் கண்டோம்…

ஆண் : முக்கோடி முத்தங்கள் உள்ளங்கையின் உள்ளே…
அவள் கையைக் குலுக்கிட கண்டோம்…

ஆண் : அதனால்லென்ன பிழை இல்லை…
பதில் சொல் என் மூன்றாம் கண்ணே…
எதிரே அவள் நம் பூமியில்…
உதிப்பாளா நம் தாமியில்…

பெண் : சின்னஞ்சிறு துளை வழியே…
அழகினை பருகுகிறாய்…
திரைவிட்டு விழிவழியே…
அவளை நீ திருடுகிறாய்…

பெண் : சின்னஞ்சிறு துளை வழியே…
அழகினை பருகுகிறாய்…
திரைவிட்டு விழிவழியே…
அவளை நீ திருடுகிறாய்…

ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி…
உண்மையா உண்மையா…
நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா…
ஏய்… பதில் சொல்லுவாயா…

ஆண் : நிழலியே…


Notes : Nizhaliyae Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Madhan Karky. நிழலியே பாடல் வரிகள்.


Scroll to Top