இது போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜா & சக்திஸ்ரீ கோபாலன்யுவன் ஷங்கர் ராஜாஇறைவன்

Idhu Pola Song Lyrics in Tamil


பெண் : கொன்றது நீ தண்டனை எனக்கா…
நீ இல்லா உலகில் வாழ்க்கை இருக்கா…

BGM

பெண் : இது போல வலியும் உண்டா…
இன்றே நான் கண்டேன்…
நீ போன வளைவில்தானே…
தனியா நான் நின்றேன்…

பெண் : உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி…
ஆகும் நாளாச்சே…
உள் உத்திரம் கூட கண்ணீராகி…
வெளியே போயாச்சே…

பெண் : நான் என்று எதோ நின்னாயே…
எல்லாம் உன்னோடு…
என் போல் காதல் செய்ய…
யாரோ மண்ணோடு…

பெண் : நினைவுகளில் தீக்குளித்தேன்…
மறந்தாலும் மீண்டும் உந்தன் முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட உன்னை கொண்டாடும்…

பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்…
நானும் உன்னோடு…
அதை சொல்லும் முன்னே நீயும் போனாய்…
வாழ்வே முள்ளோடு…

BGM

ஆண் : தூரம் இல்லை துணையும் இல்லை…
குழப்பம் கொடுக்காதே…
இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை…
நடுவில் நிறுத்தாதே…

ஆண் : நிஜம் போல பின்னே வந்து…
நிழலாகி போகாதே…
காதல் போல் காதல் தந்து…
அதை கண்ணீர் ஆக்காதே…

ஆண் : என்னை விட்டு சொல்லாமல் உயிர் போகுதே…
நீ தொட்ட இடம் எல்லாம் கரை ஆகுதே…
அந்த மழை காலம் அது திரும்பாதா…

பெண் : மறந்தாலும் மீண்டும் உந்தன் முகமே வந்தாடும்…
இறந்தாலும் சாம்பல் கூட உன்னை கொண்டாடும்…

பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்…
நானும் உன்னோடு…
அதை சொல்லும் முன்னே நீயும் போனாய்…
வாழ்வே முள்ளோடு…

BGM


Notes : Idhu Pola Song Lyrics in Tamil. This Song from Iraivan (2023). Song Lyrics penned by Vivek. இது போல பாடல் வரிகள்.


Scroll to Top