அழகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜா, சஞ்சித் ஹெக்டே, கரேஸ்மா ரவிச்சந்திரன்யுவன் ஷங்கர் ராஜாஇறைவன்

Azhagai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகை அழகாய் ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்…
நெருங்கி நெருங்கி சில நெஞ்சங்கள் சேகரிப்போம்…
சிறிதே பயணம் அதில் பூக்களை பார்த்திருப்போம்…
நினைவை திரட்டி இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்…

ஆண் : திரும்பாதது காலம்தானே…
இணைந்தால் இல்லை பாரம்தானே…
இதுவே நல்ல நேரம்தானே…
வாழ்வை கொண்டாடலாம்…

ஆண் : மனம் தேடிடும் வாசம்தானே…
வழியில் வரும் ஞானம்தானே…
கிழிந்தே வரும் தாளில் கூட…
பூக்கள் உண்டாக்கலாம்…

ஆண் : மதுவான கனவில் தினம் மானிடர் ஏறி வந்தோம்…
நமக்கான சிலரை ஒரு வரம் என வாங்கி வந்தோம்…
அதற்கான விலையாய் கொஞ்சம் நேரத்தைதான் கொடுத்தோம்…
இருந்தாலும் வரவாய் சில தோழ்களில் சாய்ந்திருந்தோம்…

BGM

பெண் : ஒரு நாள் என் மெத்தை மேல…
நான் வைத்த போர்வை இல்லை…
உன்னை கட்டி மூடி கொள்ள…
நானே வீசினேன்…

பெண் : ஒரு நாளில் சாலை ஓரம்…
மழையோடு நானும் நின்றேன்…
உன் குடை சேரத்தானே…
என் குடை தருகிறேன்…

ஆண் : உன்னோடு போகும் தூரம்…
கேள்வி இல்லாமல் போகிறேன்…
உன் பேச்சை மட்டும்தானே…
நான் உள் வாங்கினேன்…

ஆண் : நம் பிள்ளை பேரை கூட…
சேர்ந்தது உன்னோடு தேடினேன்…
கனவென்று தெரியும் கண்ணே…
திறந்து கண் மூடினேன்…

BGM

பெண் : அழகை அழகாய் ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்…
நெருங்கி நெருங்கி சில நெஞ்சங்கள் சேகரிப்போம்…
சிறிதே பயணம் அதில் பூக்களை பார்த்திருப்போம்…
நினைவை திரட்டி இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்…


Notes : Azhagai Song Lyrics in Tamil. This Song from Iraivan (2023). Song Lyrics penned by Vivek. அழகை பாடல் வரிகள்.


Scroll to Top