பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | இளையராஜா & எஸ்.ஜானகி | இளையராஜா | சாமி போட்ட முடிச்சு |
Madhulanganiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…
ஆண் : தங்க மலர் பாதம் மேவி…
தாளம் போடும் கொலுசு போல…
அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு…
பெண் : ஓ… செங்கமலம் போல…
தேவி தேரில் ஏறி உன்னைக் கூட…
இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு…
ஆண் : அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர…
அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர…
பெண் : கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர…
சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர…
ஆண் : என்னை தினம் பாடும் குயிலே…
வண்ணம் கொண்டு ஆடும் மயிலே…
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓஓ…
ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே…
பெண் : ஆஆ…
—BGM—
ஆண் : உச்சி முதல் பாதம் தோறும்…
நேரில் காண போதை ஏறும்…
கொஞ்சிக் கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும்…
பெண் : ஓ… வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி…
வேகமோடு தேரை ஓட்டி…
சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி…
ஆண் : முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ…
முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ…
பெண் : கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா…
காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா…
ஆண் : மோகம் இசை பாடும் உடலே…
காமன் விளையாடும் திடலே…
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓ…
ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே…
பெண் : மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓஓ…
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
Notes : Madhulanganiye Song Lyrics in Tamil. This Song from Saami Potta Mudichu (1991). Song Lyrics penned by Gangai Amaran. மாதுளங்கனியே பாடல் வரிகள்.