நெகிழியினில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Negizhiyinil Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…

பெண் : அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட…
எனை தீண்டிடு உயிரே…
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட…
விரல் கோர்த்திடு உயிரே…

ஆண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ…
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்…

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…

—BGM—

ஆண் : ஹே… பவள பாறை படலம் போலே…
மனதில் நிறைந்தாய்…
இமைகள் மூடி திறக்கும் முன்னே…
எதனால் மறைந்தாய்…

பெண் : உண்மையில் உன் உண்மையில்…
என் காதலை பிரிந்தேன்…
இன்மையில் உன் இன்மையில்…
உன் கண்மையை அறிந்தேன்…
கடந்தோடிடும் கணம் யாவிலும்…
எனதேக்கமே கணக்கோ…

ஆண் : நெகிழியினில் நெஞ்சம் என்றாய்…
நெருப்பை ஏன் கேட்கிறாய்…
நெருஞ்சி முல்லை போலே நின்றேன்…
நெருங்கி வர பார்க்கிறாய்…

—BGM—

பெண் : உலகம் அறியா குழந்தை எனவே…
உனை நான் நினைத்தேன்…
உனையே உலகம் வணங்கும் பொழுது…
என் மடமை உணர்ந்தேன்…

ஆண் : மாற்றிட எனை மாற்றிட…
இந்த பூமியே நினைக்க…
காதலே நீ மாறினாய்…
இதை எங்கு நான் உரைக்க…

பெண் : எனை ஏற்றிடு…
உனை ஊற்றிடு…
உயிர் ஏற்றிடு உயிரே…

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…

ஆண் : நெருப்பை ஏன் கேட்கிறாய்…

பெண் : நெருங்கி வர ஆசை கொண்டு…

ஆண் : உயிர் இளகி நிற்கிறாய்…

பெண் : அணையும் திரி தூண்டிட…
ஒளி மீண்டிட…

ஆண் : உனை தீண்டுவேன் அழகே…

பெண் : உனது விழி பார்த்திட…
விரல் கோர்த்திட…

ஆண் : துயர் தீர்ந்திடும் உயிரே…

ஆண் & பெண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ…
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்…

—BGM—


Notes : Negizhiyinil Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Madhan Karky. நெகிழியினில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading