neengum-bothail-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபிளான் பண்ணி பண்ணனும்

Neengum Bothail Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில்…
ஏதோ சாரலோ…
ஏதோ சாரலோ…
மூங்கில் மோதி தென்றல் போகும்…
போது பாடலோ…
போது பாடலோ…

ஆண் : தூரம் கூட பாரம் ஏற…
காற்றில் மௌனமோ…
ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு…
நேரம் முடியுமோ…

ஆண் : நெருங்கிடும் எண்ணம் வருகையில்…
அது விலகிட்டும் விந்தை ஏனடி…
கைகளில் யாவும் தருகையில்…
அதை இழந்திடும் நிலையில் நானடி…

ஆண் : ஒரு பூவில் வாழ்ந்திடும்…
வாசனை மறையுதே…
என் உயிரில் ஒரு வலி…
மென்மையாய் நிறையுதே…

ஆண் : காணும் கனவுகள்…
வேகமாய் கலையுதே…
சுகமானப் பயணங்கள்…
முட்களாய் குத்துதே…

ஆண் : அருகினில் நீயும்…
இருக்கையிலும் நெஞ்சம்…
தனிமையை உணருதே…
பிரிந்திடும் என்றும்…
தெரிந்திடும் உறவின்…
அறிமுகம் கொடுமையே…

BGM

ஆண் : பழகிய நாட்கள் தந்த இன்பமோ…
அழகிய வானவில்லைப் போலவே…
நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே…
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ…

ஆண் : பூமழைப் போல உந்தன் ஞாபகம்…
தீ மழை ஆக என்னக் காரணம்…
இனிவரும் காலம் மெல்லத் தேங்குமோ…
அனுபவம் ஒன்று கடந்து போகுமோ…

ஆண் : போகும் பாதை போகும்…
ஆன போதும் வேண்டுமே…
உன்னைப் பிரியும் எல்லைத் தோன்றும் வரை…
உன் பார்வை நீளுமே…

ஆண் : திரும்பாமல் சென்றிடும் போதும்…
உன் நினைவுகள் திரும்புமே…
நீ இல்லாத போதும் உன்னை என்றும் விரும்புமே…
விரும்புமே… விரும்புமே…

BGM


Notes : Neengum Bothail Song Lyrics in Tamil. This Song from Plan Panni Pannanum (2021). Song Lyrics penned by Niranjan Bharathi. நீங்கும் போதில் பாடல் வரிகள்.