என்னோடு வா பேரழகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிராஜ கணபதி & ரம்யா என்.எஸ்.கேயுவன் ஷங்கர் ராஜாபிளான் பண்ணி பண்ணனும்

Ennodu Vaa Perazhagae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னோடு வா பேரழகே…
ஏன் போகிறாய் நீ வெளியே…
நீயே எந்தன் காதல் எல்லையே…

பெண் : ஓ ஹோ… சுகம் தரும் பொய்யழகே…
உயிர் தொடும் என்னவனே…
நீ இல்லாமல் ஏதும் இல்லையே…

ஆண் : உன் இருவிழி கலவரம் செய்து…
சுடும் நெருப்பென இதயத்தைத் தீண்டும்…
எந்த நிலையிலும் எனக்கது வேண்டும்…
இந்த இன்பம் போதும் எப்போதும்…

ஆண் : நான் தேடி தேடி தேடி தேடி…
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்…
நீ வந்து போன…
வாசம் இன்னும் நீளுதே…

ஆண் : என்னோடு வா பேரழகே…
ஏன் போகிறாய் நீ வெளியே…
நீயே எந்தன் காதல் எல்லையே…

—BGM—

ஆண் : உன்னாலே நாளும் மாயங்கள்…
இல்லாமல் போகும் நியாயங்கள்…
தேனாக மாறி ஓடுமே நேரங்கள்…

பெண் : ஒன்றாகிப் போன சுவாசங்கள்…
எண்ணங்கள் யாவும் காந்தங்கள்…
பேசாத வார்த்தைப் பேசிடும் மௌனங்கள்…

ஆண் : காதலாகி காமமாகி…
வாழ்க்கை ஆகினாய்…
நீங்கிடாத மோகம் தந்து…
கைதி ஆக்கினாய்…
எந்தன் சூழல் சொர்க்கமாகும்…
உன்னைக் கண்டாலே…

ஆண் : நான் தேடி தேடி தேடி தேடி…
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்…
நீ வந்து போன…
வாசம் இன்னும் நீளுதே…

பெண் : நான் தேடி தேடி தேடி தேடி…
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்…
நீ வந்து போன…
வாசம் இன்னும் நீளுதே…

ஆண் : என்னோடு வா பேரழகே…
ஏன் போகிறாய் நீ வெளியே…
நீயே எந்தன் காதல் எல்லையே… ஏ…

—BGM—


Notes : Ennodu Vaa Perazhagae Song Lyrics in Tamil. This Song from Plan Panni Pannanum (2021). Song Lyrics penned by Niranjan Bharathi. என்னோடு வா பேரழகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading