நீ வந்து போனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே, பாம்பே ஜெயஸ்ரீ, ரம்யா என்.எஸ்.கே & மேகாஹாரிஸ் ஜெயராஜ்யான்

Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும்…
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும்…
கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே…

பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய்…
கற்கண்டு மாமழை தந்து போனாய்…
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே…

—BGM—

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

—BGM—

ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும்…
எந்நாள் என்று இன்பம் நுகரும்…
நான் கண்டேன் என் மரணம்…

ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்…
பஞ்சை பற்றி செந்தீ பரவும்…
ஓ… எங்கே என் அமுதம்…

பெண் : திரை சிலைகள் இல்லாத…
என் ஜன்னல் ஓடாக தேடினேன்…
வெளி ஓசைகள் இல்லாமல்…
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்…

பெண் : என்னை உன் உள்ளம்கை மீது…
நீ தாங்கிதாலாட்ட ஆடினேன்…
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

—BGM—

பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே…
பெண்ணை கண்டு நின்றால் நலமே…
ஓ… இங்கே நான் தனியே…

பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே…
எங்கே எங்கே எந்தன் கரையே…
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்…

ஆண் : கடை கண்ணால நீ பாா்த்த…
பாா்வைகள் போதாமல் ஏங்கினேன்…
சிறு ஓசைகள் கேட்டாலே…
நீதானோ என்றே நான் தேங்கினேன்…

ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று…
கை நீட்டி ஏமாந்து போகிறேன்…
கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…

பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…

பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

—BGM—


Notes : Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Thamarai. நீ வந்து போனது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading