நான் உணர்வோடு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்சின்மயிகோபி சுந்தர்நிசப்தம்

Naan Unarvodu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…
என் சோகம் என் மூச்சில் அலசுகிறேன்…
உன் சுவாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்…

பெண் : உறவு இல்லாத…
உரிமை கொள்ளாத…
இதுவே உலகின் முதல் மொழி…

பெண் : புது வித ஏக்கம்…
தனிமை துவக்கம்…
மீண்டும் துரத்தும் என் விதி…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…

—BGM—

பெண் : தோழமை தந்து தனிமை போக்கினாய்…
வாழ்வின் அர்த்தம் மனத்தில் ஊட்டினாய்…
சிறை கொண்ட எந்தன் பெண்மை…
சுகமாக மாற்றினாயே…
வரம் என்று உன்னை நினைத்தேன் மறைந்தாயே…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

—BGM—

பெண் : மறுஜென்மம் கேட்பேன் நட்பு கிடைக்குமா…
மறுபடி உன்னை காண ஆகுமா…
அங்கும் இங்கும் எங்கும் கண்டேன்…
உந்தன் பிம்பம் நினைவின் ஜூவாலை…
கண்ணீருக்குள் மூழ்கி தவித்தேன் ஓர் அபலை…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…
என் சோகம் என் மூச்சில் அலசுகிறேன்…
உன் சுவாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்…

பெண் : உறவு இல்லாத…
உரிமை கொள்ளாத…
இதுவே உலகின் முதல் மொழி…

பெண் : புது வித ஏக்கம்…
தனிமை துவக்கம்…
மீண்டும் துரத்தும் என் விதி…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

—BGM—


Notes : Naan Unarvodu Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. நான் உணர்வோடு பாடல் வரிகள்.


Scroll to Top