நான் பொல்லாதவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Naan Pollathavan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…

ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…

ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…

—BGM—

ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்…
வீரத்தை கண்டேனடி…
வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்…
வீரத்தை கண்டேனடி…

ஆண் : ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால்…
நான் என்ன செய்வேனடி…

ஆண் : நானுண்டு வீடுண்டு…
நாடுண்டு வாழ்வுண்டு…
என்றேதான் வாழ்ந்தேனடி…

ஆண் : நாளாக நாளாக தாளாத கோபத்தில்…
நான் வேங்கை ஆனேனடி…

ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…

ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…

ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…

—BGM—

ஆண் : நீ என்ன நான் என்ன…
நிஜம் என்ன பொய் என்ன…
சந்தர்ப்பம் பெரிதாம்மடி…

ஆண் : ஏதேதோ நடக்கட்டும்…
எங்கேயோ கிடக்கட்டும்…
எனக்கென்ன உனக்கென்னடி…

ஆண் : எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள்…
உலகத்தில் கிடையாதடி…
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக…
இது போல ஆனேனடி…

ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…

ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…

ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…

ஆண் : டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி…
பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே…

—BGM—


Notes : Naan Pollathavan Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. நான் பொல்லாதவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading