முத்து சிரித்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவேந்திரன்மண்ணுக்குள் வைரம்

Muthu Sirithathu Song Lyrics in Tamil


{ குழு : ஹேய்… பொங்கி சிரிக்கிற தங்கச் சிலைக்கொரு…
குங்குமத்தை இடுங்க…
ஹேய்… பூத்து குலுங்கிடும் நந்தவனத்துக்கு…
ஆரத்தியும் எடுங்க…

குழு : பொன்னாரத்த பூவாரத்த போடு…
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க… } * (2)

குழு : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…

குழு : இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…

ஆண் : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…

பெண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…

—BGM—

ஆண் : முல்லை மலர்க்கொடியே பக்கம் வந்தாலென்ன…
மோக வண்ணக் குயிலே சொர்க்கம் தந்தாலென்ன…

பெண் : கொத்து மலர்க்கொடியை நீயும் தொட்டாலென்ன…
முத்து மணிச்சரத்தில் கையும் பட்டாலென்ன…

ஆண் : தேன் கனியே அழைக்கையில்…
மாங்கிளிதான் மறுக்குமா…

பெண் : வான் மழை போல் பொழிகையில்…
பூமரம்தான் தடுக்குமா…

ஆண் : அழகிய கலை நிலவே வா அருகே வா…
இதயமும் ஏங்குது இரு விழி மயங்குது…

—BGM—

ஆண் : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…

பெண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…

குழு : ஹேய்… வெள்ளைக் கிளியொன்று பச்சை நிறம் கொண்டு…
துள்ளி சிரிக்கிறதே…
ஹேய்… பட்டு ரவிக்கையில் சிட்டுக்குருவியும்…
கண்ணைப் பறிக்கிறதே…

குழு : பொன்னாரத்த பூவாரத்த போடு…
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க…

—BGM—

பெண் : உன்னை எண்ணும்பொழுது நாணம் உண்டாகுது…
ஆசை என்னும் அலைகள் என்னை பந்தாடுது…

ஆண் : கன்னி விழி அசைவில் காதல் தேர் ஓடுது…
காதல் இளமைகள் அன்பில் நீராடுது…

பெண் : நான் உனக்கெனவே பிறந்தவள்…
நீ தொடவே மலர்ந்தவள்…

ஆண் : உன்னருகே இருக்கையில்…
உன் உலகம் தெரியுது…

பெண் : விருந்துன்னை அழைக்கிறதே வா விரைந்தே வா…
மனம் தரும் பூவிது மன்னனிடம் மயங்குது…

—BGM—

ஆண் : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…

பெண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…

பெண் & ஆண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தோமே…


Notes : Muthu Sirithathu Song Lyrics in Tamil. This Song from Mannukul Vairam (1986). Song Lyrics penned by Muthulingam. முத்து சிரித்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading