உன்னை தினம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆபாவாணன்டி. எம்.சௌந்தரராஜன் & பி.எஸ். சசிரேகாமனோஜ் கியான்உழவன் மகன்

Unnai Thinam Thedum Song Lyrics in Tamil


ஆண் : மாலை கருக்கலிலே மை இருட்டு வேளையிலே…
சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு…
சோர்வு என்ன கால்களுக்கு…

—BGM—

ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…

ஆண் : காவல் வரும் போது கையில் விலங்கேது…
கால்கள் நடமாடட்டும்… லால்லால்லா லாலா…

குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…

குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…

ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…

ஆண் : காவல் வரும் போது கையில் விலங்கேது…
கால்கள் நடமாடட்டும்… லால்லால்லா லாலா…

—BGM—

பெண் : துணிவிருந்தால் பாட முடியும்…
துணை இருந்தால் ஆட முடியும்…
ஆடும் மயிலானது…
அரங்கில் துணை தேடுது…

ஆண் : தோகை விரித்தாடம்மா…
தோளில் சாய்ந்தாடம்மா…
தோல்வி எனக்கேதம்மா…
கேள்வி இனி ஏதம்மா…

குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…

குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…

—BGM—

ஆண் : அன்றொரு நாள் பிறந்த நிலவு…
முழு மதியாய் வளர்ந்த அழகு…
இன்று பெண்ணானது…
எதிரில் நின்றாடுது…

பெண் : மேகம் பகையானது…
நிலவு சிறையானது…
மன்னன் துணை வந்ததும்…
சிறையும் சுகமானது…

குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…

குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…

ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…

ஆண் : காவல் வரும் போது கையில் விலங்கேது…
கால்கள் நடமாடட்டும்… லால்லால்லா லாலா…

பெண் : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…

ஆண் : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…

—BGM—


Notes : Unnai Thinam Thedum Song Lyrics in Tamil. This Song from Uzhavan Magan (1987). Song Lyrics penned by Aabavanan. உன்னை தினம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading