இதழோடு இதழ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவேந்திரன்மண்ணுக்குள் வைரம்

Ithazhodu Ithazh Serum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதழோடு இதழ் சேரும் நேரம்…
இன்பங்கள் ஆறாக ஊறும்…

பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம்…
இன்பங்கள் ஆறாக ஊறும்…

ஆண் : மடி மீது தலை வைத்து…
பெண் : மடி மீது தலை வைத்து…

ஆண் : கண்ணே உன்னோடு நான்…
கதை சொல்ல வேண்டும் இதழோடு…

ஆண் : இதழோடு…
பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம்…
ஆண் : இன்பங்கள் ஆறாக ஊறும்…

—BGM—

ஆண் : என் பேரை மறந்து நான் இருந்தேன்…
நீ எந்தன் நினைவாக வந்தாய்…

பெண் : ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்…
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்…

ஆண் : கச்சேரி கேளாத இசை உண்டு மானே…
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம்தானே…

பெண் : என் மேனி உன் மார்பில்தானே…
என் மேனி உன் மார்பில்தானே…

ஆண் : இதழோடு இதழ் சேரும் நேரம்…
பெண் : இன்பங்கள் ஆறாக ஊறும்…

—BGM—

பெண் : சில நாளாய் துடித்தன விழிகள்…
ஏனென்று கேளுங்கள் நீங்கள்…

ஆண் : கண் தூக்கம் மறந்தன இமைகள்…
நீயின்றி நகராது நாட்கள்…

பெண் : கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்…
பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்…

ஆண் : நான் உந்தன் மருந்தாக ஆனேன்…
நான் உந்தன் மருந்தாக ஆனேன்…

பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம்…
இன்பங்கள் ஆறாக ஊறும்…

ஆண் : மடி மீது தலை வைத்து…
பெண் : கண்ணா உன்னோடு நான்…
கதை சொல்ல வேண்டும்…

ஆண் & பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம்…
இன்பங்கள் ஆறாக ஊறும்…


Notes : Ithazhodu Ithazh Serum Song Lyrics in Tamil. This Song from Mannukul Vairam (1986). Song Lyrics penned by Pulamaipithan. இதழோடு இதழ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading