முருகனை கூப்பிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எம்.பி.சிவம்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Muruganai Kooppittu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு…
முற்றிய வினை தீருமே…
முருகனை கூப்பிட்டு…

ஆண் : முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு…
முற்றிய வினை தீருமே…
உடல் பற்றிய பிணி ஆறுமே…
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று…
இனிதுற மெத்த இன்பம் சேருமே…
அப்பன் முருகனை கூப்பிட்டு…

—BGM—

ஆண் : குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு…
குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு…
குறைகள் யாவும் போகுமே…
அவர் குடும்பம் தழைத்தோங்குமே…

ஆண் : குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு…
குறைகள் யாவும் போகுமே…
அவர் குடும்பம் தழைத்தோங்குமே…

ஆண் : சூர சமர வேலாயுதம் பக்கத்துணை கொண்டால்…
சகல பயம் நீங்கும்…
ஐயன் முருகனைக் கூப்பிட்டு…

—BGM—

ஆண் : அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்…
முருகா… முருகா…
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்…
அருகில் ஓடி வருவார்…
அன்பு பெருகி அருள் புரிவார்…
அந்தக் கருணை உருவான குருபரன் என்றுமே…
கைவிடாமல் ஆளுவார்…
அப்பன் முருகனைக் கூப்பிட்டு…

—BGM—

ஆண் : கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு…
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு…
காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே…

—BGM—

ஆண் : கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு…
காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே…
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவு உண்டாகி…
மேன்மை உயர்வாகுமே…
ஐயன் முருகனைக் கூப்பிட்டு…

ஆண் : முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு…
முற்றிய வினை தீருமே…
முருகனை கூப்பிட்டு…
முருகா…


Notes : Muruganai Kooppittu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by M.P. Sivam. முருகனை கூப்பிட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading