மண்ணானாலும் திருச்செந்தூரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
குழந்தை வேலன்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Mannanalum Thiruchenduril Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…

—BGM—

ஆண் : மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்…

ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…

—BGM—

ஆண் : பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்…
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்…
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்…
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்…

ஆண் : தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்…
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்…
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்…

ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன…

—BGM—

ஆண் : சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்…
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்…
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்…
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்…

ஆண் : அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்…
அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்…
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்…

ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்…

ஆண் : நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்…

ஆண் : முருகா… முருகா… முருகா… முருகா…

—BGM—

Notes : Mannanalum Thiruchenduril Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kuzhanthai Velan. மண்ணானாலும் திருச்செந்தூரில் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading