சின்னச் சின்ன தூறல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ராஜ்கிருஷ்ணாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Chinna Chinna Thooral Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…
சின்ன சின்ன…

—BGM—

ஆண் : உனது தூறலும் இனிய சாரலும்…
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா…

பெண் : அது தீண்டும் மேகமில்ல…
தேகம் சிலிர்க்குதம்மா…

ஆண் : உனது தூறலும் இனிய சாரலும்…
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா…
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா…

ஆண் : மனித ஜாதியின் பசியும் தாகமும்…
உன்னால் என்றும் தீருமம்மா…
வாரித் தந்த வள்ளல் என்று…
பாரில் உன்னைச் சொல்வதுண்டு…

ஆண் : இனமும் குலமும் இருக்கும் உலகில்…
அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே…
சின்ன சின்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…

—BGM—

ஆண் : பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்…
நீயோ இங்கே வருவதில்லை…

பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு…
பிழைக்கும்ன்னு எழுதலையே…
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்…

ஆண் : ஓஹோ… மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்…
நீயோ இங்கே வருவதில்லை…
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்…
நீயோ கண்ணில் தெரிவதில்லை…
உனது சேதியை பொழியும் தேதியை…
முன்னால் இங்கே யாரறிவார்…

ஆண் : நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்…
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்…
உனது பெருமை உலகம் அறியும்…
இடியென்னும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே…
சின்ன சின்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…
சின்ன சின்ன…


Notes : Chinna Chinna Thooral Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. சின்னச் சின்ன தூறல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading