மாணிக்க வீணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownபி. சுசீலாUnknownஅம்மன் பாடல்கள்

Manikka Veenai Song Lyrics in Tamil


BGM

பெண் : மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி…
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…

பெண் : அருள்வாய் நீ…
இசை தர வா நீ…
இங்கு வருவாய் நீ…
லயம் தரும் வேணி அம்மா…

பெண் : மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி…
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நாமணக்க பாடி நின்றால்…
ஞானம் வளர்ப்பாய்…
பூமணக்க பூஜை செய்தால்…
பூவை நீ மகிழ்வாய்…

பெண் : மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி…
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…

BGM

பெண் : வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்…
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்…
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்…
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்…

பெண் : கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்…
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ…

பெண் : வாணி சரஸ்வதி மாதவி பாரதி…
வாகதீஸ்வரி மாலினி…
காணும் பொருளில் தோன்றும் கலைமணி…
வேண்டும் வரம் தரும் வேணி…

பெண் : நான்முகன் நாயகி மோகனரூபிணி…
நான்மறை போற்றும் தேவி நீ…
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்…
கான மனோகரி கல்யாணி…

பெண் : அருள்வாய் நீ…
இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ…
லயம் தரும் வேணி அம்மா…

பெண் : மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி…
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…


Notes : Manikka Veenai Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. மாணிக்க வீணை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading