ஆரிய உதடுகள் உன்னது 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Aariya Uthadugal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிய உதடுகள் உன்னது…
திராவிட உதடுகள் என்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

பெண் : ஆரிய உதடுகள் என்னது…
திராவிட உதடுகள் உன்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும்…
அதுதான் வெற்றி என்றாகும்…
இதில் நீ வெற்றி பெற வேண்டும்…
மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்… ம்ம்… ம்ம்…

ஆண் : ஆரிய உதடுகள் உன்னது…
திராவிட உதடுகள் என்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

BGM

பெண் : எத்தனை உள்ளது பெண்ணில்…
அட எது மிக பிடித்தது என்னில்…
பகல் பொழுதின் பேரழகா…
ராத்திரியின் சூரணமா…

பெண் : மின்னல்கள் சடுகுடு ஆடும்…
கண்ணா கண்ணா…
மேலாடை மேகம் மூடும்…
நெஞ்சா நெஞ்சா…

ஆண் : ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்…
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்…
மோகம் வரும் தருணங்களில்…
முனகலிடும் ஒலி பிடிக்கும்…

ஆண் : கட்டில் மேல் எல்லாம் கலைந்த…
பின்னே பின்னே…
கலையாத கொலுசு ரொம்ப…
பிடிக்கும் பிடிக்கும்…

பெண் : என் நாயகா என்னை பிரிகையில்…
என் ஞாபகம் தலை காட்டுமா…
உன் ஆண் மனம்… ம்ம்… ம்ம்… தடுமாறுமா…
பிற பெண்கள் மேல் மனம் போகுமா…

ஆண் : ஏ… கண்களே நீயாய் போனால்…
வேறு பார்வை வருமா…

பெண் : ஆரிய உதடுகள் என்னது…
திராவிட உதடுகள் உன்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…

ஆண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

BGM

ஆண் : தேவதை புன்னகை செய்தால்…
சிறு தேய்பிறை முழு நிலவாகும்…
குறை குடமாய் நான் இருந்தேன்…
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன்…

ஆண் : உன்னோடு மழையாய் வந்து…
பொழிந்தாய் பொழிந்தாய்…
உயிரெல்லாம் ஓடி ஓடி…
நிறைந்தாய் நிறைந்தாய்…

பெண் : ஜீவித நதியென விரைந்தாய்…
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்…
பிறவியிலே தாய் கொடுத்தாய்…
பிறந்த பயன் நீ கொடுத்தாய்…

பெண் : ஆணுக்கு முழுமை என்ன…
பெண்தான் பெண்தான்…
பெண்ணுக்கு முழுமை என்ன…
ஆண்தான் ஆண்தான்…

ஆண் : அடி காற்றினால் வான் நிறையுது…
நம் காதலால் உயிர் நிறையுது…
வளர் ஜோதியே எந்தன் பாதியே…
நீ என்னதான் எதிர் பார்க்கிறாய்…

பெண் : ஜீவனின் மையம் தேடி…
கைகள் மீண்டும் தொடுமா…

ஆண் : ஆரிய உதடுகள் உன்னது…
பெண் : திராவிட உதடுகள் உன்னது…
ஆண் : ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
பெண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும்…
அது தான் வெற்றி என்றாகும்…
இதில் நீ வெற்றி பெற வேண்டும்…

ஆண் & பெண் : மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்… ம்ம்… ம்ம்…


Notes : Aariya Uthadugal Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. ஆரிய உதடுகள் உன்னது பாடல் வரிகள்.


Scroll to Top