தங்கமகன் இன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராதேவாபாட்ஷா

Thanga Magan Indru Song Lyrics in Tamil


BGM

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

BGM

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

பெண் : கட்டும் ஆடை…
என் காதலன் கண்டதும் நழுவியதே…
வெட்கத் தாழ்ப்பாள்…
அது வேந்தனை கண்டதும் விலகியதே…

பெண் : ரத்தத் தாமரை…
முத்தம் கேட்குது வா…
என் வாழ்வே வா…

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

BGM

ஆண் : சின்னக் கலைவாணி…
நீ வண்ண சிலைமேனி…
அது மஞ்சம் தனி மாறம்…
தலை வைக்கும் இன்பத் தலகாணி…

பெண் : ஆசைத் தலைவன் நீ…
நான் அடிமை மகராணி…
மங்கை இவள் அங்கம் எங்கும்…
பூச நீதான் மருதாணி…

ஆண் : பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்…
பெண் : தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்…

ஆண் : என்ன சம்மதமா…
பெண் : இன்னும் தாமதமா…

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

BGM

பெண் : தூக்கம் வந்தாலே…
மனம் தலையணை தேடாது…
தானே வந்து காதல் கொல்லும் உள்ளம்…
ஜாதகம் பார்க்காது…

ஆண் : மேகம் மழை தந்தால்…
துளி மேலே போகாது…
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும்…
விதிதான் மாறாது…

பெண் : என் பேரின் பின்னே…
நீ சேர வேண்டும்…

ஆண் : கடல் கொண்ட கங்கை…
நிறம் மாற வேண்டும்…

பெண் : என்னை மாற்றி விடு…
ஆண் : இதழ் ஊற்றி கொடு…

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

பெண் : கட்டும் ஆடை…
என் காதலன் கண்டதும் நழுவியதோ…
வெட்கத் தாழ்ப்பாள்…
அது வேந்தனை கண்டதும் விலகியதோ…

பெண் : முத்தம் என்பதேன் அர்த்தம் பழகிட வா…
என் வாழ்வே வா…

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…


Notes : Thanga Magan Indru Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. தங்கமகன் இன்று பாடல் வரிகள்.


Scroll to Top