நான் ஆட்டோகாரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் தேவாபாட்ஷா

Naan Autokaran Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்…
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்…
நல்லவங்க கூட்டுக்காரன்…

ஆண் : நல்லாப் பாடும் பாட்டுக்காரன்…
காந்தி பொறந்த நாட்டுக்காரன்…
கம்பெடுத்தா வேட்டைக்காரன்…
எளியவங்க உறவுக்காரன்…

ஆண் : இரக்கமுள்ள மனசுக்காரண்டா…
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…

ஆண் : அட அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

குழு : அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

ஆண் : நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்…
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்…

—BGM—

ஆண் : ஊரு பெருசாச்சு…
சனத்தொகை பெருத்தாச்சு…

குழு : ஜும்த லக்கடி ஜும்தா…
ஹே ஜும்த லக்கடி ஜும்தா…

ஆண் : ஆஹா… ஊரு பெருசாச்சு…
சனத்தொகை பெருத்தாச்சு…
பஸ்ஸ எதிர்பார்த்து பாதி வயசாச்சு…
வாழ்க்கை பரபரக்கும் நேரத்திலே…
இருப்போம் சாலைகளின் ஓரத்தில…

ஆண் : அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க…
நீங்க கை தட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க…
ஹான்… அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க…
நீங்க கை தட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க…

ஆண் : முந்தி வரும் பாரு…
இது மூணு சக்கரத் தேரு…
நன்மை வந்து சேரும்…
நீ நம்பி வந்து ஏறு…

ஆண் : இரக்கமுள்ள மனசுக்காரண்டா…
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…

ஆண் : அட அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

குழு : அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

ஆண் : நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…
நியாயம் உள்ள ரேட்டுக் காரன்…

—BGM—

ஆண் : ஆ.. அம்மா தாய்மாரே…
ஆபத்தில் விட மாட்டேன்…

குழு : ஜும்த லக்கடி ஜும்தா…
ஹே ஜும்த லக்கடி ஜும்தா…

ஆண் : ஏ…அம்மா தாய்மாரே…
ஆபத்தில் விட மாட்டேன்…
வெயிலோ புயல் மழையோ…
மாட்டேன்னு சொல்ல மாட்டேன்…

ஆண் : அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்…
அளவு சாப்பாடு ஒரு நேரம்…

ஆண் : நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா…
உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேன்மா…
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா…
உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேன்மா…

ஆண் : எழுத்தில்லாத ஆளும்…
அட எங்கள நம்பி வருவான்…
அட்ரஸ் இல்லாத் தெருவும்…
இந்த ஆட்டோக்காரன் அறிவான்…

ஆண் : இரக்கமுள்ள மனசுக்காரண்டா…
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…

ஆண் : அட அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

குழு : அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

ஆண் : நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்…
நல்லவங்க கூட்டுக்காரன்…

ஆண் : நல்லாப் பாடும் பாட்டுக்காரன்…
காந்தி பொறந்த நாட்டுக் காரன்…
கம்பெடுத்தா வேட்டைக்காரன்…
எளியவங்க உறவுக்காரன்…

ஆண் : இரக்கமுள்ள மனசுக்காரண்டா…
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா…

ஆண் : அட அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

குழு : அஜக்கு இன்னா அஜக்குதான்…
குமுக்கு இன்னா குமுக்குதான்…

குழு : அஜக்கு இன்னா அஜக்குதான்…
ஆண் : அஜக்கு…
குழு : குமுக்கு இன்னா குமுக்குதான்…
ஆண் : குமுக்கு…

குழு : அஜக்கு இன்னா அஜக்குதான்…
ஆண் : அஜக்கு…
குழு : குமுக்கு இன்னா குமுக்குதான்…
ஆண் : குமுக்கு…


Notes : Naan Autokaran Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. நான் ஆட்டோகாரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading