நீ நடந்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாபாட்ஷா

Nee Nadandhaal Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகு… அழகு…

பெண் : நீ நடந்தால் நடை அழகு… அழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு…
நீ பேசும் தமிழ் அழகு… அழகு…
நீ ஒருவன்தான் அழகு… அழகு… அழகு…

பெண் : ஹோ… நெற்றியிலே சரிந்து விழும்…
நீள முடி அழகு…
அந்த முடி கோதுகின்ற…
அஞ்சு விரல் அழகு… அழகு… அழகு…

BGM

ஆண் : நான் ஆசையை வென்ற…
ஒரு புத்தனும் அல்ல…
என் காதலை சொல்ல…
நான் கம்பனும் அல்ல…

ஆண் : உன் காது கடித்தேன் நான்…
கனவினில் மெல்ல…
இன்று கட்டி அணைத்தேன்…
இது கற்பனை அல்ல…

பெண் : அடி மனம் தவிக்கும்…
அடிக்கடி துடிக்கும்…
ஆசையை திருகிவிடு…

பெண் : இருவிழி மயங்கி…
இதழ்களில் இறங்கி…
உயிர் வரை பருகி விடு…

ஆண் : ஹோ… முத்தம் வழங்காது…
ரத்தம் அடங்காது… பெண் : அழகு… அழகு…

பெண் : ஆ… நீ நடந்தால் நடை அழகு… அழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு…
நீ பேசும் தமிழ் அழகு… அழகு…
நீ ஒருவன் தான் அழகு… அழகு… அழகு…

BGM

பெண் : நான் பார்ப்பது எல்லாம்…
அட உன் முகம்தானே…
நான் கேட்பது எல்லாம்…
அட உன் குரல்தானே…

பெண் : அந்த வான் மழை எல்லாம்…
இந்த பூமிக்கு தானே…
என் வாலிபம் எல்லாம்…
இந்த சாமிக்குதானே…

ஆண் : மடல் கொண்ட மலர்கள்…
மலர்ந்தது எனக்கு…
மது ரசம் அருந்தட்டுமா…

ஆண் : விடிகின்ற வரையில்…
முடிகின்ற வரையில்…
கவிதைகள் எழுதட்டுமா…

பெண் : முத்தம் என்ற கடலில்…
முத்து குளிப்போமா…
அழகு… அழகு…

ஆண் : ஓ… நீ நடந்தால் நடை அழகு… அழகு…
நெருங்கி வரும் இடை அழகு… அழகு…
வேல் எரியும் விழி அழகு… அழகு…
பால் வடியும் முகம் அழகு… அழகு… அழகு…

ஆண் : ஹோ ஓ… தங்க முலாம் பூசி வைத்த…
அங்கம் ஒரு அழகு…
தள்ளி நின்று எனை அணைக்கும்…
தாமரையும் அழகு…

பெண் : அழகு… அழகு… அழகு… அழகு…


Notes : Nee Nadandhaal Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. நீ நடந்தால் பாடல் வரிகள்.


Scroll to Top