மங்கள ரூபிணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownதிருவனந்தபுரம் சகோதரிகள்சிவபுராணம் டி.வி ரமணிஅம்மன் பாடல்கள்

Mangala Rupini Song Lyrics in Tamil


BGM

பெண் : மங்கள ரூபிணி மதியணி சூலினி…
மன்மத பாணியளே…
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்…
சங்கரி சௌந்தரியே…

பெண் : கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்…
கற்பக காமினியே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டி…
காத்திட வந்திடுவாள்…
தானுறு தவஒளி தாரொளி மதியொளி…
தாங்கியே வீசிடுவாள்…

பெண் : மானுறு விழியால் மாதவர் மொழியாள்…
மாலைகள் சூடிடுவாள்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட…
சபையினில் வந்தவளே…
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்து…
பொருந்திட வந்தவளே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எங்குலத் தழைத்திட எழில்வடிவுடனே…
எழுந்தநல் துர்க்கையளே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : தணதண தந்தண தவிலொளி முழங்கிட…
தண்மணி நீ வருவாய்…
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட…
கண்மணி நீ வருவாய்…

பெண் : பணபண பம்பண பறையொலி கூவிட…
பண்மணி நீ வருவாய்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : பஞ்சமி பைரவி பர்வத புத்திரி…
பஞ்சநல் பாணியளே…
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனை…
கொடுத்தநல் குமரியளே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்…
சக்தியெனும் மாயே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : எண்ணிய படிநீ யருளிட வருவாய்…
எங்குல தேவியளே…
பண்ணிய செயலின் பலனது நலமாய்…
பல்கிட அருளிடுவாய்…

பெண் : கண்ணொளி யதனால் கருணையே காட்டி…
கவலைகள் தீர்ப்பவளே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை…
யென்றுநீ சொல்லிடுவாய்…
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச…
சுகமது தந்திடுவாய்…

பெண் : படர்தரு இருளில் பரிதியாய் வந்து…
பழவினை ஓட்டிடுவாய்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : ஜெயஜெய பாலா சாமுண்டீஸ்வரி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…

பெண் : ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…


Notes : Mangala Rupini Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. மங்கள ரூபிணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading