மனசு ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Manasu Rendum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : நரம்பில் ஒருநதி பாயுதே…
இது என்ன வேட்கை…
காதல் வலி உடல் காயுதே…
இது என்ன வாழ்க்கை…

குழு (ஆண்கள்) : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

—BGM—

ஆண் : காதல் சருகான பின்பு…
மோகம் வந்தாலே சாபம்…
கண்ணில் முள் வைத்து மூடி…
தூங்க சொன்னாலே பாவம்…

ஆண் : உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி…
மருந்து போல குடிப்பேன்…
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்…
உன் பாத சுவடுக்குள்…
சுருங்கி விழுந்து மரிப்பேன்…

குழு (ஆண்கள்) : உடல் சீறுதே…
நிறம் மாறுதே…
வலி ஏறுதே…
இது என்ன கலவரமோ…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

—BGM—

ஆண் : நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா…
அலையின் வேதனை நிலவு அறியுமா…
வேதனைகள் நெஞ்சில் சுகமா…
எங்கும் பரவுதடி…

ஆண் : உடலே உடலே உறைந்து போய்விடு…
மனமே மனமே இறந்து போய்விடு…
பாதையிலே சிறு கல்லாய்…
என்னை கிடக்க விடு…

ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே…
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே…

ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே…
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே…
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே…
அதை மறக்காதே…

ஆண் : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : நரம்பில் ஒரு நதி பாயுதே…
இது என்ன வேட்கை…
காதல் வலி உடல் காயுதே…
இது என்ன வாழ்க்கை…

ஆண் : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…


Notes : Manasu Rendum Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. மனசு ரெண்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading