மனசே மனசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்தேவாதம்

Manase Manase Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனசே… மனசே…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

—BGM—

ஆண் : ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…

—BGM—

ஆண் : உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா…
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா…
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…

—BGM—

ஆண் : மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய் சுமந்தாய்…

—BGM—

ஆண் : மலையை தனியே சுமந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…

—BGM—

ஆண் : காதல் சிறகை தந்து பறக்க சொன்னது வெளியே…
காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே…

ஆண் : அற்றை திங்கள் அந்நிலவில்…
உன் அருகே இருந்ததை நினைக்கின்றேன்…
ஒற்றை குயிலாய் நான் இங்கே…
உன் நினைவை தின்று பிழைக்கின்றேன்…

ஆண் : சிலருக்கு காதலை பிடிப்பதில்லை…
செடி என்று அடை மழை பார்ப்பதில்லை…

ஆண் : காதல் என்றால் வலிதானே…
தவணை முறையில் இறந்தேனே…

—BGM—

ஆண் : நிலவினில் உன் முகம்…
தினம் தினம் தோன்றிடும்…
தீ அள்ளி வீசிடுமே…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

ஆண் : மனசே… மனசே…

ஆண் : மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…

—BGM—

ஆண் : இதயம் இன்னும் துடிக்கும் காரணம்…
கேளு கண்ணே…
நெஞ்சில் சட்டை பையில்…
உந்தன் புகைப்படம் பெண்ணே…

ஆண் : உன்னை போலே யாரேனும்…
என் எதிரே போனால் வலிக்குதடி…
சாலை ஒரு கடையினிலே…
உன் பேரை படித்தால் வலிக்குதடி…

ஆண் : நதிகளின் நுரைகளில் உன் கொலுசு…
சுழி என சுழலுது என் மனசு…
உயிரே உயிரே வருவாயா…
உயிரை காவல் புரிவாயா…

—BGM—

ஆண் : காதலன் மதுவை குடித்தவன் நிலைமை…
ஐயோ அது கொடுமை…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

—BGM—

ஆண் : உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா…
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா…
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா…

ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…

ஆண் : மனசே…


Notes : Manase Manase Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. மனசே மனசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading