மலரே ஒரு வார்த்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்சிவாபூமகள் ஊர்வலம்

Malare Oru Varthai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

—BGM—

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

—BGM—

ஆண் : காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மௌனமோ…
மோதி வந்து முத்தமிட்டால்…
மௌனம் தீருமோ…

ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ…
வெட்கம்தான் முந்தானையோ…
மௌனம்தான் உன் வேலியோ…
செம்பூவே வா வா வா வா…

பெண் : விழியே ஒரு வார்த்தையானால்…
மொழி என்பது வேண்டாமே…

—BGM—

ஆண் : வார்த்தையாடி பார்த்தபோது…
காதல் வரவில்லை…
காதல் வந்து சேர்ந்தபோது…
வார்த்தை வரவில்லை…

பெண் : நான்கு கண்கள் பேசும்போது…
தாய்மொழிக்கு இடமில்லை…
மௌனம் பாடும் பாடல் போலே…
மனதுக்கு சுகமில்லை…

ஆண் : மலர்களை எறிப்பது முறையில்லை…
மௌனத்தை உடைப்பது சரியில்லை…
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்…
வார்த்தைகள் புரிவது எளிதில்லை…

பெண் : கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே…
நெஞ்சு பிடிக்குது முல்லை…
வெளியில் சொல்லவில்லை…

ஆண் : வெட்க படாத பூக்களை…
வண்டுகள் தொடாதடி…
முத்தம் தராமல் வெட்கம்…
சாயம் போகாதடி…

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

—BGM—

பெண் : பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்…
பெண்ணுக்கு தெரியாது…
ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும்…
அவசியம் புரியாது…

ஆண் : காதல் மங்கை சொன்ன வார்த்தை…
கவிதையில் கிடையாது…
அட காதலிக்கும் ஆட்கள் போல…
கவிஞர்கள் கிடையாது…

பெண் : இரவிலே தாமரை மலராது…
பகலிலே அல்லியும் அவிழாது…
இதயப்பூ எப்போதும் மலரும் என்று…
இதுவரை சொன்னவர் கிடையாது…

ஆண் : ஏய்… ராஜமோகினி ரம்பா ரம்பா…
உன் எடைக்கெடை தங்கம்…
தரத்துடிக்கும் நெஞ்சம்…

பெண் : கைகள் தொடாமல் கண்களால்…
நெஞ்சை பந்தாடினாய்…
ரத்தம் வராமல் பார்வையால்…
என்னை துண்டாடினாய்…

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

—BGM—

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

—BGM—

ஆண் : காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மௌனமோ…
மோதி வந்து முத்தமிட்டால்…
மௌனம் தீருமோ…

ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ…
வெட்கம்தான் முந்தானையோ…
மௌனம்தான் உன் வேலியோ…
செம்பூவே வா வா வா வா…

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

—BGM—


Notes : Malare Oru Varthai Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. மலரே ஒரு வார்த்தை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading