மழைக்காற்று வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்வித்யாசாகர்வேதம்

Malaikatru Vandhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…

—BGM—

பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசினால்…
மலைச்சாரல் வந்து இசை பாடினால்…
மலரோடு வண்டு உரையாடினால்…
உன்னோடு நானும் பேசுவேன்…

—BGM—

பெண் : புல்லோடு இரவில் பனி தூங்குமே…
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே…
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே…
தூங்காது நமது தீபமே…
தூங்காது நமது தீபமே…

ஆண் : கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே…
உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே…
முடியாது அண்டம் முடிந்தாலுமே…
முடியாது நமது பந்தமே…
முடியாது நமது பந்தமே…

பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா…
மலைச்சாரல் வந்து இசை பாடுமா…

ஆண் : மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…

—BGM—

ஆண் : இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்…
என்னென்ன வென்று சரி பார்க்கிறேன்…
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்…
இடைவேளை இல்லை தொடருவேன்…
இடைவேளை இல்லை தொடருவேன்…

பெண் : கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்…
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்…
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்…
இனி என்ன செய்வது அறியேன்…
இனி என்ன… ஹ்ம்ம்…

ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…

—BGM—


Notes : Malaikatru Vandhu Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Vairamuthu. மழைக்காற்று வந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading