சின்ன சின்ன காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன், கிருஷ்ணராஜ், தேவா & அனுராதா ஸ்ரீராம்தேவாஒன்ஸ் மோர்

Chinna Chinna Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னில் என்னில் உள்ளது காதல்…
ஒவ்வொரு உயிரும் செய்வதும் காதல்…
உலகம் முழுதும் உலவும் காதல்…

BGM

ஆண் : சின்ன சின்ன காதல்…
கண்ணுக்குள்ள காதல்…
முத்து முத்து காதல்…
இது புத்தம் புது காதல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதல் மேடையிலே…
கவிதைகள் பாடுகிறோம்…
காற்றை கேட்டுவிட்டோம்…
கடலை கேட்டுவிட்டோம்…

ஆண் : காதல் என்னவென்று தமிழ் கொண்டு…
ஒரு பாடல் நீங்கள் பாடி காட்டுங்கள்…

BGM

ஆண் : உன்னையும் என்னையும் பெற்றது காதல்…
உலக பந்தின் உயிர்தான் காதல்…
ஊசி முனையின் காதுக்குள்ளே…
ஓட்டகங்களை நுழைப்பது காதல்…
காதின் ஓரம் நரைத்தும்கூட…
இளமை போட்டு இழுப்பது காதல்…

குழு : தாம் தரிகிட தத் தீம் தா…
தாம் தரிகிட தத் தீம் தா…
தாம் தரிகிட தாம் தரிகிட…
தக்கிட தக்க தக்கிட…

குழு : தாம் தரிகிட தத் தீம் தா…
தாம் தரிகிட தத் தீம் தா…
தாம் தரிகிட தாம் தரிகிட…
தக்கிட தக்க தக்கிட…

BGM

ஆண் : நிலவுக்கு புன்னகை தந்தது காதல்…

BGM

ஆண் : நிலவுக்கு புன்னகை தந்தது காதல்…
உலகுக்கு பூக்கள் தந்தது காதல்…

பெண் : யாருக்கும் தெரியாமல்…
ஊரெல்லாம் அறியாமல்…
மனசுக்குள் மழை தூவும் காதல்…

ஆண் : ஒரு பனி துளி தந்தால்…
பாற்கடல் செய்திடும் காதல்…

பெண் : ஒரு பாற் கடல் தந்தால்…
பனி துளி ஆக்கிடும் காதல்…

ஆண் : மூடி வைத்த போதும்…
தடை மீறும் விதை போல…
மண்ணை வெல்லும் காதலே…

ஆண் : சபாஷ்…

BGM

ஆண் : ராமையா ராவையா…
ப்ரேமின்சி சூடையா…
பிரேம லேகா நூவ்வே லேது…
நேனே லேது… லோகமே லேது…

பெண் : சின்ன சின்ன காதல்…
கண்ணுக்குள்ள காதல்…
முத்து முத்து காதல்…
இது புத்தம் புது காதல்…

BGM

ஆண் : பூவுக்குள் போர்களம் செய்வதும் காதல்…

BGM

பெண் : பூவுக்குள் போர்களம் செய்வதும் காதல்…
போர்க்களத்தில் பூச்செடி வைப்பதும் காதல்…

ஆண் : நிலவொளியை நெசவு செய்து…
நித்தம் ஒரு ஆடை நெய்து…
காதலிக்கு பரிசாக்கும் காதல்…

பெண் : விழி உறங்கிடும் பொழுதிலும்…
உதடுகள் நுழைவது காதல்…

ஆண் : மனம் மயங்கிடும் பொழுதிலும்…
உயிருக்குள் வளர்வது காதல்…

பெண் : காதல் என்ற பாடல் முடியாது…
அதை எங்களோடு நீங்கள் பாடுங்கள்…

BGM

ஆண் : இருபது வயதில் இளமை காதல்…
அறுபது வயதில் அனுபவ காதல்…
எங்கும் காதல் எதிலும் காதல்…
பொங்கும் காதல் புதுமை காதல்…
காதல் என்பது கனவாய் போனால்…
கனவே கனவே கனவே காதல்…

BGM

ஆண் : அப்பா…

—BGM—

ஆண் : ராமையா ராவையா…
ப்ரேமின்சி சூடையா…
பிரேம லேகா நூவ்வே லேது…
நேனே லேது லோகமே லேது…

BGM


Notes : Chinna Chinna Kaadhal Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading