பூவே பூவே பெண் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.என். சுரேந்தர் & கே.எஸ். சித்ராதேவாஒன்ஸ் மோர்

Poove Poove Pen Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவே பூவே பெண் பூவே…
என் பூஜைக்கு வரவேண்டும்…

ஆண் : பூவே பூவே பெண் பூவே…
என் பூஜைக்கு வரவேண்டும்…
நம் காதல் வாழவேண்டும்…
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்…

ஆண் : நீ விடும் மூச்சிலே…
நான் கொஞ்சம் வாழ்கிறேன்…
காதலுக்கு என்றும்…
ஜன கன மன இல்லையே…

பெண் : பூவே பூவே பெண் பூவே…
உன் பூஜைக்கு வரவேண்டும்…
நம் காதல் வாழவேண்டும்…
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்…

பெண் : நீ விடும் மூச்சிலே…
நான் கொஞ்சம் வாழ்கிறேன்…
காதலுக்கு என்றும்…
ஜன கன மன இல்லையே…

ஆண் : பூவே பூவே பெண் பூவே…

—BGM—

ஆண் : காதலின் வயது…
அடி எத்தனை கோடி…
அத்தனை வருஷம்…
நாம் வாழனும் வாடி…

பெண் : ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால்…
உயிரும் அற்று போகும்…
பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட…
கோடி வருஷமாகும்…

ஆண் : காதலுக்கு என்றும்…
ஜன கன மன இல்லையே…

பெண் : பூவே பூவே பெண் பூவே…

—BGM—

பெண் : பூமியை தழுவும்…
வேர்களை போலே…
உன் உடல் தழுவி…
நான் வாழ்ந்திட வந்தேன்…

ஆண் : ஆண்டு நூறு நீயும் நானும்…
சேர்ந்து வாழ வேண்டும்…
மாண்டு போன கவிகள் நம்மை…
மீண்டும் பாட வேண்டும்…

பெண் : காதலுக்கு என்றும்…
ஜன கன மன இல்லையே…

ஆண் : பூவே பூவே பெண் பூவே…
என் பூஜைக்கு வரவேண்டும்…

பெண் : நம் காதல் வாழவேண்டும்…
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்…

ஆண் : நீ விடும் மூச்சிலே…
நான் கொஞ்சம் வாழ்கிறேன்…

ஆண் & பெண் : காதலுக்கு என்றும்…
ஜன கன மன இல்லையே…

ஆண் & பெண் : பூவே பூவே பெண் பூவே…


Notes : Poove Poove Pen Poove Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. பூவே பூவே பெண் பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading