காதல் என்ன கண்ணாமூச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்அவள் வருவாளா

Kadhal Enna Kannamoochi Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா…
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா…

ஆண் : கண்ணுக்குள் பாரம்மா…
நீயின்றி யாரம்மா…
கோவங்கள் இன்னும் இங்கு ஏனம்மா…

ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா… ஓஓ… ஓஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கூந்தல் வருடும் காற்று…
அது நானா இருந்தேன் தெரியாதா…
கொலுசு கொஞ்சும் பாட்டு…
அதன் பல்லவி ஆனேன் புரியாதா…

ஆண் : சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்…
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்…
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்…
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்…

ஆண் : பனிப்பூவில் வாசமாய்…
கலந்தேனே நானம்மா…

ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : நிலவை உரசும் மேகம்…
அந்த நிலவை நினைத்தே உருகாதா…
உயிரை பருகும் காதல்…
அது ஒரு நாள் உனையும் பருகாதா…

ஆண் : நீ முடிந்த பூவில் ஒரு இதழாய்…
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்…
நீ நடந்த மண்ணெடுத்து சிலநாள்…
சந்தனத்தின் வாசம் அதில் நுகர்ந்தேன்…

ஆண் : நிழல் தீண்டும் போதிலும்…
மனதோடு வேர்க்கிறேன்…

ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா…
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா…

ஆண் : கண்ணுக்குள் பாரம்மா…
நீயின்றி யாரம்மா…
கோவங்கள் இன்னும் இங்கு ஏனம்மா…

ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா… ஓஓ… ஓஓ…
ஹ்ம்ம் ம்ம்ம்… ஹ்ம்ம் ம்ம்ம்…


Notes : Kadhal Enna Kannamoochi Song Lyrics in Tamil. This Song from Aval Varuvala (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் என்ன கண்ணாமூச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading