சிக்கி முக்கி உய்யாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்அவள் வருவாளா

Sikki Mukki Uyyala Song Lyrics in Tamil


—BGM—

குழு : சிக்கி முக்கி உய்யாலா…
சிக்கிக்கிட்டாளா…
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

—BGM—

குழு : சிக்கி முக்கி உய்யாலா…
சிக்கிக்கிட்டாளா…
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

ஆண் : மச்சான் கிட்ட முந்தானைய…
தந்து வைப்பாளா…

குழு : சிக்கி முக்கி உய்யாலா…
சிக்கிக்கிட்டாளா…

பெண் : முந்தானைய தந்துபுட்டு…
சும்மா நிப்பாளா…

குழு : வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

ஆண் : பலநாள் பசி இருக்கு…
விருந்து வைப்பாளா…

பெண் : கேட்டா கொடுப்பதற்கு…
புல்லா வைக்கோலா…

ஆண் : விலகாதே விடமாட்டேன்…
மச்சான் வேர் ஓா் ஆளா…

குழு : சிக்கி முக்கி உய்யாலா…
சிக்கிக்கிட்டாளா…
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

ஆண் : மச்சான் கிட்ட முந்தானைய…
தந்து வைப்பாளா…

பெண் : முந்தானைய தந்துபுட்டு…
சும்மா நிப்பாளா…

—BGM—

ஆண் : இடுப்பில் உள்ள மடிப்புக்குள்ள…
மாட்டிக்கிட்டேன் மானே…

—BGM—

பெண் : அதுக்குத்தானே இழுத்து…
இப்ப போத்திக்கிட்டேன் நானே…

—BGM—

ஆண் : ஹே… மொட்டு உடம்ப தொட்டு திறக்கும்…
தேதி ஒண்ணு சொல்லு சொல்லு…

பெண் : கட்டிப்புடிச்சா புயலடிக்கும்…
இப்போ கொஞ்சம் தள்ளி நில்லு…

ஆண் : அலுக்கி குலுக்கி…
எம்மனச கொள்ளையடிக்கிறியே…

பெண் : விரட்டி விரட்டி பெண்மனசில்…
கிளி புடிக்கிறியே…

ஆண் : சூடேற்றி போகாம…
ஆத்துப்பக்கம் வாடி…

குழு : சிக்கி முக்கி உய்யாலா…
சிக்கிக்கிட்டாளா…
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

ஆண் : மச்சான் கிட்ட முந்தானைய…
தந்து வைப்பாளா…

பெண் : முந்தானைய தந்துபுட்டு…
சும்மா நிப்பாளா…

—BGM—

பெண் : மஞ்ச உடம்பு சிவந்திருக்கு…
மாமா உன்ன பாத்து…

—BGM—

ஆண் : எனக்கும் இப்போ வேர்த்திருச்சி…
மச்சம் ஒன்னை பாத்து…

—BGM—

பெண் : ஹா பட்டு உடலில் பட்டு தெறிக்கும்…
மின்னல் ஒன்னு துள்ள துள்ள…

ஆண் : வெட்கம் துடைக்க விளக்கணைக்க…
ஜன்னல் கண்ணை மூடிக்கொள்ள…

பெண் : வெத்தலைய போடாமதான்…
உதடு சிவக்கணும்…

ஆண் : பத்து நாளு கழிச்சி தாண்டி…
கதவ திறக்கணும்…

பெண் : பூமால மாத்தாம…
வேணாம் மாமா ஜாலி…

குழு : சிக்கி முக்கி உய்யாலா…
சிக்கிக்கிட்டாளா…
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

ஆண் : மச்சான் கிட்ட முந்தானைய…
தந்து வைப்பாளா…

பெண் : முந்தானைய தந்துபுட்டு…
சும்மா நிப்பாளா…

ஆண் : பலநாள் பசி இருக்கு…
விருந்து வைப்பாளா…

பெண் : கேட்டா கொடுப்பதற்கு…
புல்லா வைக்கோலா…

ஆண் : விலகாதே விடமாட்டேன்…
மச்சான் வேர் ஓா் ஆளா…

குழு : சிக்கி முக்கி உய்யாலா…
சிக்கிக்கிட்டாளா…
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

—BGM—


Notes : Sikki Mukki Uyyala Song Lyrics in Tamil. This Song from Aval Varuvala (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சிக்கி முக்கி உய்யாலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading