மாட்டிகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனாஹரிசரண் & ரீட்டாகார்த்திக் ராஜாபடை வீரன்

Mattikkiten Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அய்யய்யோ மாட்டிகிட்டேன்…
உன்கிட்ட மாட்டிகிட்டேன்…
வலிக்காம காட்டிகிட்டேன்…
கனவேது நிஜமேது தெரியல…

ஆண் : நீ என்ன சுத்திவிட்ட…
எங்கெங்கோ பத்தவச்ச…
கண்ணுக்குள் கத்தி வச்ச…
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல…

—BGM—

ஆண் : அய்யய்யோ மாட்டிகிட்டேன்…
அய்யய்யோ மாட்டிகிட்டேன்…

—BGM—

பெண் : சண்டை போட்டு பாத்திருப்ப…
சண்டி குதிரை சாஞ்சி நின்னு பாத்தியா…
கத்தி பேசி பாத்திருப்ப…
கள்ளிப்பூவு கண்ணடிச்சேன் பாத்தியா…

ஆண் : யே… கொக்கு நீ…
உன் கெளுத்தி நான்…
என்ன கொத்தி குதறிட…
கத்தி கதறிட…
கம்மா கரையில…
ஏமா நொழையிற நீ…

பெண் : அய்யய்யோ மாட்டிகிட்ட…
என்கிட்ட மாட்டிகிட்ட…
வலிக்காம காட்டிகிட்ட…
கனவேது நிஜமேது தெரியல…

பெண் : நா உன்ன சுத்திவிட்டேன்…
எங்கெங்கோ பத்தவச்சேன்…
கண்ணுக்குள் கத்தி வச்சேன்…
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல…

—BGM—

ஆண் : பொங்கி திரிஞ்ச பொட்டப்புள்ள…
பொண்ண பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா…
பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள…
கன்னி பொண்ணு கங்க தூக்கி வைக்குறா…

பெண் : நான் சிங்காரி…
என் சிரிப்பு தீ…
என் பட்டு சேலைய சுத்தி எறிந்திட…
வலையா விழுகுது…
திசையா மறைக்குதடா…

ஆண் : என்கிட்ட சக்தி இல்ல…
உன்னைப்போல் புத்தி இல்ல…
திருடிட்டா பொட்ட புள்ள…
கண்ட கனவுல அலையிறேன்…

ஆண் : குலசாமி கோவிலுக்கு…
குறும்பாடு நேந்துவிட்டேன்…
காப்பாத்த வேண்டிகிட்டேன்…
திசை ஏது வலி ஏது தெரியல…


Notes : Mattikkiten Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Dhana. மாட்டிகிட்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading