தொடு தொடுவெனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Thodu Thoduveneve Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

ஆண் : விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…

பெண் : மன்னவா ஒரு கோயில் போல்…
இந்த மாளிகை எதற்காக…

ஆண் : தேவியே என் ஜீவனே…
இந்த ஆலயம் உனக்காக…

பெண் : வானில் ஒரு புயல் மழை வந்தால்…
அழகே எனை எங்கனம் காப்பாய்…

ஆண் : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து…
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்…

பெண் : சாத்தியமாகுமா…

ஆண் : நான் சத்தியம் செய்யவா…

பெண் : தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

—BGM—

பெண் : இந்த பூமியே…
தீா்ந்து போய்விடில்…
என்னை எங்கு சோ்ப்பாய்…

ஆண் : நட்சத்திரங்களை…
தூசு தட்டி நான்…
நல்ல வீடு செய்வேன்…

பெண் : நட்சத்திரங்களின் சூட்டில் நான்…
உருகிப்போய்விடில் என் செய்வாய்…

ஆண் : உருகிய துளிகளை ஒன்றாக்கி…
என் உயிா் தந்தே உயிா் தருவேன்…

பெண் : ஹே… ராஜா…
இது மெய்தானா…

ஆண் : ஏ… பெண்ணே தினம் நீ செல்லும்…
பாதையில் முள்ளிருந்தால்…
நான் பாய் விாிப்பேன் என்னை…

பெண் : நான் நம்புகிறேன் உன்னை…
தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

ஆண் : விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…

பெண் : நீச்சல் குளம் இருக்கு…
நீரும் இல்லை…
இதில் எங்கு நீச்சலடிக்க…

ஆண் : அத்தா் கொண்டு…
அதை நிரப்ப வேண்டும்…
இந்த அல்லி ராணி குளிக்க…

பெண் : இந்த நியதியில் அன்பு செய்தால்…
என்னவாகுமோ என் பாடு…

ஆண் : காற்று வந்து உன் குழல் கலைத்தால்…
கைது செய்வதென ஏற்பாடு…

பெண் : பெண் நெஞ்சை…
அன்பால் வென்றாய்…

ஆண் : ஹே… ராணி…
அந்த இந்திரலோகத்தில்…
நான் கொண்டு தருவேன்…
நாள் ஒரு பூ வீதம்…

பெண் : உன் அன்பு அது போதும்…

பெண் : தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

ஆண் : விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…

பெண் : மன்னவா ஒரு கோயில் போல்…
இந்த மாளிகை எதற்காக…

ஆண் : தேவியே என் ஜீவனே…
இந்த ஆலயம் உனக்காக…

பெண் : வானில் ஒரு புயல் மழை வந்தால்…
அழகே எனை எங்கனம் காப்பாய்…

ஆண் : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து…
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்…

பெண் : சாத்தியமாகுமா…

ஆண் : நான் சத்தியம் செய்யவா…

—BGM—


Notes : Thodu Thoduveneve Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. தொடு தொடுவெனவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading